‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள்’: கண்டன குரலால் மன்னிப்பு கோரிய நடிகை

மும்பை: இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என்று கூறிய நடிகை சோனாலி குல்கர்னி, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார். பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ேபசுகையில், ‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகமாக்கிக் கொள்வதற்கு பதிலாக, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காதலன் அல்லது கணவனைத் தேடுகிறார்கள்’ என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், … Read more

ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்ற டெல்லி போலீசார் – காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறி இருந்தது தொடர்பாக விசாரிக்க டெல்லி போலீசார் இன்று அவரது வீட்டிற்குச் சென்றனர். சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பேசும்போது, பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், இது குறித்த கேள்விகளை அனுப்பி பதில் அளிக்குமாறு கோரி இருந்தனர். இந்நிலையில், … Read more

சமாஜ்வாடி தேசிய செயற்குழு கொல்கத்தாவில் துவங்கியது

கொல்கத்தா: சமாஜ்வாடி கட்சி 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று கொல்கத்தாவில் துவங்கியது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான கிரண்மோய்நந்தா கூறுகையில்,‘‘ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 11 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தாவில் நடக்கிறது.  2 நாள்   கூட்டத்தில்  இந்தாண்டு நடக்கும் சட்டீஸ்கர்,ராஜஸ்தான்,மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கான உத்திகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது’’ என்றார். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான … Read more

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – கடும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு

கொரோனா தொற்றுக்குள்ளான வீரருக்கு இரண்டு முறை ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே மறுபடியும் அணியின் முகாமுக்குள் நுழைய முடியும் என ஐபிஎல் கட்டுப்போடு போடப்பட்டுள்ளது. 16வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனிடையே, இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய மூன்று சீசன்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த … Read more

பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது – இன்று நண்பகல் வரை இணைய தள சேவைகள் முடக்கம்

ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மாதம் … Read more

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  மொத்தம் 76 மாதிரிகளில்  உருமாறிய எக்ஸ்பிபி.1.16  வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில தான்  உருமாறிய எக்ஸ்பிபி.1.16  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல மாநிலங்களில் கொரோனா  மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளின்படி இந்த புதிய  உருமாறிய வைரசினால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  இதில் கர்நாடகாவில் 30 ,மகாராஷ்டிரா 29 , புதுச்சேரி 7 , டெல்லி 5 ,  … Read more

பிஎஃப்ஐ தீவிரவாத படை சதி முறியடிப்பு – என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் தீவிரவாத படையை உருவாக்கும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் கேரளாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு கலவரங்கள், படுகொலைகள், தீவிரவாத தாக்குதல்களில் அந்த அமைப்புக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் பிஎஃப்ஐ மற்றும் அதனோடு தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

சீனாவை பாராட்டுகிறார், இந்தியாவை இகழ்கிறார்: ராகுல் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்

புதுடெல்லி: ராகுல்காந்தி தனது லண்டன் சுற்றுப்பயணத்தில் சீனாவை பாராட்டும் போது இந்தியாவை இகழ்ச்சி செய்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நடந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ஒரு இந்திய குடிமகனாக, யாரோ ஒருவர் சீனாவை பாராட்டுவதையும், இந்தியாவை  நிராகரிப்பதையும் பார்க்கும்போது நான் கவலையடைகிறேன் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளர் எனறு அவர் பாராட்டுகிறார்.   ஆனால் இந்தியாவில் உற்பத்தி என்று வரும்போது குறைத்து பேசுகிறார். ‘மேக் இன் இந்தியா’ வேலை செய்யாது … Read more

டெல்லியில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் வீடியோ காட்சிகள் – போலீசார் விசாரணை

யூடியூபரான பிரின்ஸ் தீட்சித் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகையில் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் டெல்லியில் உள்ள மங்கோல்புரி மேம்பாலம் அருகே ஒரு ஆண் பெண் ஒருவரை அடித்து காரில் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்து … Read more

பெங்களூரு – மைசூரு புதிய விரைவு சாலையில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட ரூ.8,480 கோடி செலவிலான பெங்களூரு – மைசூரு விரைவு சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் விமர்சனம் எழுந்துள்ளது. பெங்களூரு – மைசூரு இடையேயான 118 கி.மீ. விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, “இந்த சாலையின் இறுதிக்கட்ட பணிகள், மழை நீர் மேலாண்மை உள்ளிட்டவை இன்னும் முடிவடையவில்லை. இதனால் … Read more