தீவிரவாத நிதி உதவி காஷ்மீரில் 8 இடங்களில் எஸ்ஐஏ ரெய்டு
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரை சேர்ந்த மத பிரசாரகரான மவுல்வி சர்ஜன் பர்கதி, காஷ்மீர் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடவும், இந்திய அரசை வீழ்த்தவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து பேசுபவர். இவர் மீது தேச விரோத பேச்சு மற்றும் சட்டவிரோத நிதி வசூல் குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பான எஸ்ஐஏ கடந்த ஆண்டு வழக்கு பதிந்தது. இவர் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதோடு, திரட்டப்படும் நிதியை தனது சுய லாபத்திற்காகவும் பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. … Read more