ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!!

கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்டோ அந்தோனி சபரிமலை விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 2020ஆம் ஆண்டில் கேரளா மாநில தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் சபரிமலை அருகே உள்ள எருமேலி பகுதியில் விமான நிலையம் அமைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் … Read more

பெங்களூருவில் சமோசா விற்று தினமும் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் த‌ம்பதி

பெங்களூரு: பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சிக்ஹார் வீர் சிங், நிதி சிங் ஆகிய இருவரும் ஹரியானாவில் பிடெக் பயோடெக்னாலஜி ஒன்றாக படித்தார்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும், பின்னர் காதலர்களாக மாறினார்கள். சிக்ஹார் வீர் சிங் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸில் எம்டெக் பயோ டெக்னாலஜி முடித்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக வேலை கிடைத்தது. வீட்டை விற்று…: தன் காதலி நிதி சிங்கை திருமணம் செய்துகொண்ட சிக்ஹார், … Read more

ஒடிசாவில் டிரைவர்கள் ஸ்டிரைக் மணப்பெண் வீட்டிற்கு 28 கிமீ நடந்து சென்ற மணமகன்: இரவு முழுவதும் பயணம் செய்து தாலி கட்டினார்

புவனேஸ்வர்: ஒடிசாவில் டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மணப்பெண் வீட்டிற்கு 28 கிமீ நடந்து சென்று மணமகன் தாலி கட்டினார். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒடிசாவில் இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வலியுறுத்தி டிரைவர்கள் சங்கம் ஸ்டிரைக் நடத்தியது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான டிரைவர்கள் பங்கேற்றனர். ராயகடா மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்காக மணமகன் வீட்டார் வாகனம் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் டிரைவர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வராததால் மணமகன் … Read more

உத்தர பிரதேசத்தில் 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டரில் 178 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில்178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆண்டின் மார்ச் 19-ம் தேதி மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். கடந்த 2022-ம்ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேசசட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். குற்றங்கள் குறைந்தது: கடந்த … Read more

நேபாள துணை ஜனாதிபதியாக ராம் சகாய பிரசாத் யாதவ் தேர்வு

காத்மாண்டு: நேபாளத்தின் மூன்றாவது துணை ஜனாதிபதியாக மாதேஸ் பகுதியைச் சேர்ந்த தலைவர் ராம் சகாய பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாள நாட்டின் துணை ஜனாதிபதியாக இருக்கும் நந்தா பகதூரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதால் புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. நேபாளத்தின் 8 ஆளும் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் மாதேஸ் பகுதியை சேர்ந்த ராம் சகாய பிரசாத் யாதவ் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்பாடி கட்சியை சேர்ந்தவர். சிபிஎன்-யுஎம்எல் கூட்டணி சார்பில் அஷ்ட லட்சுமி ஷக்யா மற்றும் … Read more

பரபரப்பு! எஸ்.ஐ.யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி!!

வாகனத்தின் ஆவணங்களை சரி பார்க்க முயன்ற எஸ்.ஐ.யை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் நேற்று இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் … Read more

உ.பி.யை தொடர்ந்து குஜராத்தில் ‘அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நாளை அறிவிக்கிறார்?

புதுடெல்லி: கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அப்போது இதுபோன்ற இரண்டு மாநில பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் வர்த்தக தொடர்புகளை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் பல மாநிலங்களில் தொடரும் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், உ.பி.யை தொடர்ந்து குஜராத் – தமிழகம் இடையிலான பழம்பெரும் உறவை போற்றும் வகையில் ‘அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்’ நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆன்மிகத்தை முன்னிறுத்தியது போல் குஜராத்தில், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதன் … Read more

7th Pay Commission: விரைவில் ஊழியர்களுக்கு 2 மாஸ் அறிவிப்புகள், தயாராகும் அரசு!!

7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தியை விரைவில் வழங்க உள்ளது. இது குறித்த விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசாங்கம் விரைவில் அகவிலைப்படி அதிகரிப்புடன் ஃபிட்மென்ட் பாக்டரையும் அதிகரிக்கப் போகிறது. இது குறித்த கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. இம்முறை அரசு மீண்டும் அகவிலைப்படியை சுமார் 4 சதவீதம்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். அரசாங்கம் அகவிலைப்படியை 4 … Read more

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை

மும்பை: அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவால் ஆன நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்று பேசுகையில், ‘‘பணவீக்கம் மோசமான நிலையில் இருந்தாலும், இந்தியாவில் உள்நாட்டு நிதி அமைப்புகள் நிலையாக உள்ளன. அமெரிக்காவில் ஒரு வங்கி திவாலாக முக்கிய காரணம், அதன் சொத்துக்களை விட அதிகப்படியான கடன் பொறுப்புகளை கொண்டிருந்தது. இது நிதி ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிப்பவை. எனவே வங்கிகள் சொத்து, கடன் விவகாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை … Read more

காங்கிரஸ் கட்சி அல்லாத புதிய தேசிய கூட்டணி – மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் முக்கிய பேச்சுவார்த்தை

கொல்கத்தா: காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் கொல்கத்தாவில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம்காட்டி வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் … Read more