ராகுலின் கேம்பிரிட்ஜ் விவகாரத்திற்கு மத்தியில் ஆக்ஸ்போர்டு யூனியன் கருத்தரங்க அழைப்பை நிராகரித்த வருண் காந்தி

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு யூனியன் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கின் அழைப்பை பாஜக எம்பி வருண்காந்தி மறுத்து, அந்த அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் பேசும்போது, இந்திய ஜனநாயகம் குறித்தும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு ஏற்படும் நிலைமை குறித்தும் சில கருத்துகளை தொிவித்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையானதால், கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக எம்பியான வருண் காந்திக்கு (மேனகா காந்தியின் மகன்), … Read more

நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் – தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி குழு ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடியது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழ்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் என்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், மோகன் பிரகாஷ், கர்நாடக காங்கிரஸ் … Read more

துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – 29 நியமனங்களை ரத்து செய்தது கொல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா: பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மேலும் மேற்குவங்க அரசின் 29 துணை வேந்தர் நியமன உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். துணை வேந்தரை நியமிப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் … Read more

ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாக மாறிவிட்டார்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி அங்கு பேசும் போது, இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார். அதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.பி.நட்டா; இந்தியாவின் உறுதி, அதன் வலிமையான … Read more

கேரளா, தமிழகம், லட்சத்தீவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு 6 நாள் சுற்றுப் பயணம்

கொச்சி: கேரளா, தமிழகம், மற்றும் லட்சத்தீவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை கேரள மாநிலம் கொச்சி நகருக்கு சென்றார். அங்கு அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்டார். அதன்பின் கடற்படை பயிற்சிதளம் ஐஎன்எஸ் துரோனாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை அவர் வழங்கினார். கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்கு அவர் இன்று செல்கிறார். அதன்பின் திருவனந்தபுரத்தில் … Read more

நாடாளுமன்ற இரு அவைகளும் 5வது நாளாக இன்றும் முடங்கியது… இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் 5வது நாளாக இன்றும் முடங்கியது. தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து தெரிவித்து கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது முதல் இரு அவைகளும்  முடங்கி வருகின்றன. 5வது நாளான இன்று இரு அவைகளும் தொடங்கியதும் … Read more

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் மீண்டும் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

“பல தடைகள் இருப்பினும் டெல்லி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது ஆம் ஆத்மி அரசு” – துணைநிலை ஆளுநர் உரை

புதுடெல்லி: டெல்லி அரசு கல்வித் துறையில் செலுத்தும் கவனத்தினால் மாணவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஐந்து நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) தொடங்கியது. அதன் முதல் நாள் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார். ஆளுநர் தனது உரையில் ஆம் ஆத்மி அரசின், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டி பேசினார். அரசுக்கு பாராட்டு: துணைநிலை ஆளுநர் தனது உரையில், “ஆம் ஆத்மி … Read more

பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியத் தந்தை கைது!

பெங்களூருவில், பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை பிரிந்து பெற்றோருடன் 2 ஆண்டுகளாக வசித்துவந்தார். பெற்றோரை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட ஆஷா, வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் தந்தை ரமேஷ் உடன் சண்டையிட்டுவிட்டு இரவில் உறங்க சென்ற ஆஷாவை, அவர் விறகு கட்டையால் … Read more

தமிழ்நாட்டின் நிதிநிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டின் நிதிநிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது; புதிதாக கடன் வாங்க தேவையில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி பங்கீடு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. ஒன்றிய அரசின் நிதிபங்கீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25,000 கோடி குறைந்துள்ளது. அதானி குழும பங்குகள் சரிவால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.