ஆதார் அட்டை புதுப்பித்துக்கொள்ள ஓர் வாய்ப்பு..!!

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்கிற சூழல் நிலவுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே முக்கிய ஆவணமாகக் கருதப்பட்டது. அதன்பிறகு கடந்த 2009ம் ஆண்டு 12 இலக்க எண் கொண்ட ஆதாரை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கன் கருவி, கைரேகைகள் , புகைப்படம் என அனைத்தும் இந்த ஆதாரில் அடங்கியுள்ளது. சிம் கார்டு வாங்குவது தொடங்கி கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்க, பான் கார்டு பெற, … Read more

இணைய வழி விசாரணைகளுக்காக இ-கோர்ட் திட்டம் அறிமுகம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: “மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதி பெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது” என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிபெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் … Read more

ரூ.70,500 கோடியில், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு புதிய தளவாடங்கள் வாங்க ஒப்புதல்..!

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு, சுமார் 70 ஆயிரத்து 500 கோடி மதிப்பில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய ராணுவ தளவாடங்கள் வாங்க, அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 60 மரைன் ஹெலிகாப்டர்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், ராணுவத்திற்கு 307 இலகுரக பீரங்கிகள் வாங்கவும், விமானப்படைக்கு 9 இலகுரக துருவ் … Read more

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு: சிபிஐ நடவடிக்கை!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மனீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்துள்ளனர். மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க … Read more

சந்திராயன் 3 திட்டத்தின் ஒலியியல், அதிர்வு சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 திட்டத்திற்கான தொழில்நுட்பப் பணிகள் கடந்த இரண்டு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று … Read more

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பியான கனிமொழி என்.வி.என்.சோமு, ‘இதர பிற்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது தற்போது கடைபிடிக்கப்படும் கிரீமிலேயர் நடைமுறையால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடைமுறை நீக்கப்படுமா?’ என்று … Read more

அருணாச்சல பிரதேசம் மாநிலம் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் உயிரிழப்பு

மண்டாலா: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த, நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் பலி!!

அருணாச்சல பிரதேசத்தில் பழமையான சீட்டா வகை ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலம் மண்டலா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் போம்டிலா என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது. இன்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது. இதனையடுத்து தேடுதல் குழுக்கள் மூலம் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி:  கொரோனா பரவலை அடுத்து 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டிய அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, … Read more

’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கு நேர்மாறாக இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்தான் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முடக்குவார்கள். ஆனால், இந்த முறை ஆளும் பாஜக எம்பிக்களே நாடாளுமன்றத்தை அமளியால் முடக்கி வருகின்றனர்.  முதல் அமர்வை முடக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்ற முதல் பட்ஜெட் அமர்வு முழுவதும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி விவகாரத்தை … Read more