அதானி குழுமம் குறித்து புகார் அளிக்க எதிர்க்கட்சியினர் பேரணி: மல்லிகார்ஜூன கார்கே, டி.ஆர்.பாலு, வைகோ பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர். எதிர்கட்சியினரின் இந்த பேரணி செல்வதால் போலீசார் அங்கு அதிகமானோர் குவிந்துள்ளனர். அதானி குழுமம் குறித்து புகார் அளிக்கவே எதிர்க்கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இருக்கின்ற அமலாக்க துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு கொடுப்பது தான் இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இவர்களது திட்டத்தை முறியடிக்கும் விதத்தில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்கியது. இதையொட்டி கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கின. இன்று முதல் வரும் 19ம் தேதி வரை 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மய பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படிபூஜை ஆகியவையும் நடைபெறும். 19ம் தேதி இரவு … Read more

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 18 எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி எதிர்கட்சி உறுப்பினர்களின் பேரணி நடந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் … Read more

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றதால் மனைவி, மாமியார் கொலை!!

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதால், மனைவி, மாமியாரை புதுமாப்பிள்ளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ருக்மணி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து முதலிரவில் சரவணன், பெண்ணிடம் எதுவும் பேசாமல் தூங்கியுள்ளார். இதேபோன்று சில நாட்கள் அவர் நடந்து கொண்டதால், மாப்பிள்ளை மீது பெண்ணின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று ஆண்மை பரிசோதனை … Read more

அமலாக்கத்துறை விசாரணை சம்மனுக்கு தடைகோரி கவிதா வழக்கு.. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அமலாக்கத்துறையின் விசாரணை சம்மனுக்கு தடைகோரி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு புகார் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, கவிதாவிடம் அமலாக்கத்துறை கடந்த 11 ஆம் தேதி விசாரணை நடத்தியது. மீண்டும் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் கவிதா தரப்பில் இன்று … Read more

முதலிரவு நடக்காததை பக்கத்து வீட்டில் சொன்னதால் மனைவி, மாமியார் படுகொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது

திருப்பதி: முதலிரவு நடக்காததை வெளியில் சொல்லியதால் மனைவி மற்றும் மாமியாரை தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்தார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. தெலுங்கானா மாநிலம் … Read more

2023ம் ஆண்டில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிப்பு – மத்திய உள்துறை இணையமைச்சர்

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த இரண்டரை மாதங்களில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பாஜக எம்பி சுசில்குமார் மோடி எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், உபா சட்டத்தின்கீழ் தி ரெஸிஸ்டென்ட் பிராண்ட், பிப்பில்ஸ் ஆன்டி பாசிஸ்ட் பிராண்ட், ஜம்மு-காஷ்மீர் கஜ்னவி படை, காலிஸ்தான் புலிகள் படை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் தி ரெசிஸ்டென்ட்ஸ் பிரான்ட் அமைப்பானது, லஸ்கர் … Read more

பார்ஸி இணையத் தொடர் காட்சியை மீண்டும் உருவாக்க ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த யூடியூபர்கள் இருவர் கைது..!!

அரியானா: அரியானாவில் வெப் தொடரில் ஒன்றில் வரும் காட்சியை போல ரூபாய் நோட்டுகளை வீசி எரிந்து வீடியோ எடுத்த யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். அரியானாவில் குருகிராம் நகரில் இரவு நேரத்தில் ஓடும் காரில் இருந்து இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த காட்சிகள் சமூக  வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இளைஞர் ஒருவர் காரை ஒட்டி செல்ல டிக்கியில் துணியால் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர் ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் … Read more

XBB.1.16 கொரோனா வைரஸ்: இந்தியாவில் மீண்டும் அலறவிடும் பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது. இதிலிருந்து மீண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆனது. இருப்பினும் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டதா? என்றால் இல்லை என்பது தான் நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. உருமாறிய வைரஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மாதிரிகள் உருவாகி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக வந்திருப்பது XBB.1 … Read more

என்ன ராசிப்பா இவரு… 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!

திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் என்றும், இரண்டு பேர் ஒன்று சேர்வது என்றும்தான் பெரும்பாலும் திருமணம் குறித்து சமூகத்தில் சொல்லப்படுபவை. திருமணத்தைத் திட்டமிடுவதற்கும், மத நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் மரபுகளின்படி நடத்துவதற்கும் நிறைய மெனக்கடல்களும் உள்ளன. ஆணும் பெண்ணும் உறுதி எடுத்துக்கொள்வதன் மூலம், அவர்கள் தம்பதிகளாக மாறுகிறார்கள். இதன்மூலம்தான், சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது, மதிக்கிறது என்று தெரியும் என கூறப்படுகிறது. தம்பதியினருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் உறுதியுடனும் இருப்பதும் … Read more