பட்ஜெட் கூட்டத்தொடர் | ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை ஆளும் கட்சியும் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு திங்கள்கிழமைத் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுத் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினரும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கர்நாடகாவில் இந்து அமைப்பினர் நடத்திய பேரணியின் போது தாக்குதல்: இஸ்லாமியர் குடியிருப்பு, மசூதி மீது கல்வீச்சு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாவேரிமாவட்டத்தில் இஸ்லாமியர் குடியிருப்புகள் மற்றும் மசூதியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்து அமைப்பினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஹாவேரி மாவட்டம் ரட்டிஹள்ளி கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. சுதந்தர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா உருவப்படத்துடன் அவர்கள் நடத்திய பேரணி இஸ்லாமியர் வசிக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது. அப்போது மசூதி மீதும் குடியிருப்புகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த … Read more

எச்3என்2 வைரஸ் காய்ச்சல் – 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

புனே: இன்ஃப்ளூயன்ஸா ஏ என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இவ்வகை வைரஸ்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த வயது பிரிவில் உள்ள குழந்தைகள்தான் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நடப்பாண்டு ஜனவரியிலிருந்து எடுக்கப்பட்ட 2,529 மாதிரிகளில் ஏறக்குறைய 17 சதவீதம் அதாவது 428 மாதிரிகள் எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் … Read more

நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரம்

நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சூரிச் சர்வதேச விமான நிலை ய ஏஜியின் துணை நிறுவனமான, யமுனா சர்வதேச தனியார் விமான நிலையம் டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லையில் ஜேவரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் தை மேம்படுத்துகிறது. இதற்காக தளத்தில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 400க்கும் மேற்பட்ட இயந்திரங்களும் நிறு வப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் … Read more

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன்

டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜரான நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ரூ.1.18 லட்சம் கோடியில் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்: மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு 2023-24-ம் நிதியாண்டுக்கான ரூ.1.18 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியதாவது: வரும் 2023-24 நிதியாண்டுக் கான ஜம்மு-காஷ்மீரின் மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,18,500 கோடியாகும். இதில், மேம்பாட்டு செலவினம் ரூ.41,491 கோடியும் அடங்கும். வேளாண், தோட்டக்கலைக்கு ரூ.2,526.74 கோடியும், சுகாதார கல்விக்கு ரூ.2,097.53 கோடியும், ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.4,169.26 கோடியும், மின் துறைக்கு ரூ.1,964.90 கோடியும், … Read more

மருத்துவக் காப்பீடு குறித்து மிகப்பெரிய அப்டேட், உடனே இந்த செய்தியை படுயுங்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத்துவக் காப்பீடு பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள், இதில் நோயாளியை பணத்தை க்ளைம் செய்வதற்கு, குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதை விட குறைவாக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவ காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்துவிடும். ஆனால், நுகர்வோர் மன்றத்தின் உத்தரவில், மருத்துவக் காப்பீடு பெறுபவர் 24 மணி நேரத்திற்குள் க்ளெய்ம் எடுக்க உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. … Read more

கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: தண்ணீரை பீச்சியடித்து விரட்டியடித்த போலீஸ்

கொச்சி: கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினரை தண்ணீரை பீச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில் 110 ஏக்கரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் கொச்சியில் உள்ள பல இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இடதுசாரி அரசின் அலட்சியப்போக்கே தீவிபத்துக்கு காரணம் என்று … Read more

போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றும் OBC மாணவர்களுக்கு இலவச பயிற்சி: மத்திய அரசு

புதுடெல்லி: போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில், ”நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் … Read more

கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும்… மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்தியஅரசு அறிவுறுத்தல்

கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா எழுதிய கடிதத்தில், குடிநீர் பம்புகளை பழுது நீக்குதல், வனப்பகுதியில் தீயணைப்பு முன்னேற்பாடுகள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் கோடைக் கால நோய்களுக்கான மருந்துகளை கைவசம் வைத்திருத்தல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தக் … Read more