திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22ம் தேதி உகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 21ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி … Read more

லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுலுக்கு எதிராக பாஜ கடும் அமளி நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியதை கண்டித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ அமளியில் ஈடுபட்டது. இதனால் இருஅவைகளும் முடங்கின. நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.  அடுத்த மாதம் 6ம் தேதி  வரை நடைபெறும் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் புகார் தெரிவித்த … Read more

மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

புனே: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நான்கு இடங்களிலும், மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஐஎஸ்ஐஎஸ் (கேபி) ஆதரவாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புனேவை சேர்ந்த தல்ஹா கான் மற்றும் … Read more

ஹோலி பண்டிகையின் போது நீதிமன்ற வளாகத்தில் ஆபாச நடனம்: டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆபாச நடன நிகழ்ச்சிக்கு டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6ம் தேதி ஹோலி மிலன் விழா நடைபெற்றது. விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடினார். அதனை … Read more

விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம்? – கனிமொழி சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என மாநிலங்களைவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு, “பயணத்தை ரத்து செய்வதற்கான கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்துவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திங்கள்கிழமை காலை … Read more

வடகிழக்கு மாநிலங்களின் ஃபார்முலா கேரளாவில் அமல்; பாஜக புதிய வியூகம்.!

வடகிழக்குக் கிழக்கில் வெற்றி வாகை சூடிய பாஜக, அதேபோல் கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது. இரண்டு முக்கிய இந்து அல்லாத சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், அம்மாநிலத்தின் வெற்றிக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். இவர்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அறுவடை செய்து வருகிறது. பாரம்பரியமாகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் ஒரு மாநிலத்தை … Read more

மகாராஷ்டிரா முதல்வரின் யாத்திரையின் போது பெண் நிர்வாகிக்கு எம்எல்ஏ முத்தம் கொடுத்தாரா?: வீடியோ வைரலால் பரபரப்பு

மும்பை: சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவானது இணையங்களில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆசிர்வாத யாத்திரையின்போது சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரே ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோவில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள், வேனில் நின்றபடி இருபுறம் உள்ள மக்களுக்கு கையசைத்துக் கொண்டே செல்கின்றனர். சிவசேனா கட்சி எம்எல்ஏ … Read more

பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம்’ நிறுத்தம்: ரவிக்குமார் எம்.பி விமர்சனம்

புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)’ கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்ணா பூர்ண தேவி பதில் அளித்தார். விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ‘பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களை விஞ்ஞானிகளாக வளர்த்தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)ஆகும். திறமையான மாணவர்களை … Read more

பிரதமர் மோடியை தீர்த்து கட்ட வேண்டும்; காங்கிரஸ் தலைவர் சர்ச்சை.!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறிய கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளாத பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தியது. கூட்டத்தில் உரையாற்றிய ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா பேசும்போது, “அதானி மற்றும் அம்பானியை அகற்ற வேண்டும் … Read more

ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.. சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி துறைமுகத்தில் வணிகரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தவும், 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள … Read more