ஏப்ரல் 30-ல் தெலங்கானா தலைமைச் செயலக கட்டிடம் திறப்பு – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதியதலைமைச் செயலக கட்டிடம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானா மாநில அரசு ரூ. 650 கோடி செலவில் அதன் தலைநகர் ஹைதராபாத்தில் மிகபிரம்மாண்டமாக தலைமைச் செயலகத்தை கட்டியுள்ளது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் ஏரி அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக புதிய தலைமைச் செயலகம் உருவாகியுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு … Read more

கொரோனாவை மிஞ்சும் வேகத்தில் பரவுகிறது மீண்டும் மிரட்டும் எச்3என்2 இன்புளூயன்சா: வைரஸ் காய்ச்சலால் பலர் அவதி; இருமல், சளி, காய்ச்சல் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாடு அரசு நேற்று ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டது. இருப்பினும் பொதுமக்கள் இன்னும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ் கொரோனாவை விட வேகமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.   இன்புளூயன்சா ஏ … Read more

அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை – ரயில்வே அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளில் பயோ கழிப்பறை வசதி செய்யப்பட்டு வருகிறது. ராஞ்சி ராஜ்தானி ரயிலில் சோதனை முயற்சியாக பயோ கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு மக்களவையில் கூறும்போது, “நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சுமார் 1,450 பெட்டிகளில் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன” … Read more

அரசாங்கத்திற்கு பதற்றத்தை அதிகரித்த H3N2! மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை

H3N2 சிகிச்சை: H3N2 வைரஸ் மத்திய அரசின் கவலையை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நிதி ஆயோக் H3N2 தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தியது, அப்போது மத்திய அரசின் சார்பில் கடிதம் எழுதி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. H3N2 இல் இலிருந்து அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார் என்று யாருக்கு சொல்லப்பட்டது? H3N2 இலிருந்து யார் தீவிரமான நிலையைப் பெறலாம்? H3N2 அறிகுறிகளைக் காட்டிய பிறகு யாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்? காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச … Read more

மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் மார்ச் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது

கைவினை கலைஞர்களுக்கு முழு ஆதரவு: பிஎம்-விகாஸ் திட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய கருத்தரங்குகளை 12 விதமான தலைப்புகளில் மத்திய அரசு நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். நேற்றைய கருத்தரங்கில் பிரத மரின் விஸ்வகர்மா கவுசல் சம்மான் (விகாஸ்) திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உள்நாட்டு கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு கைவினைக் கலைஞர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். தொலைதூர பகுதிகளில் வாழும் இந்த கைவினை கலைஞர்களுக்கு உதவவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும் ஒரு … Read more

ஹோலிப் பண்டிகையின் போது மானபங்கம் செய்யப்பட்ட ஜப்பானியப் பெண்.. டிவிட்டர் புகாரை அடிப்படையாகக் கொண்டு 3 பேரை கைது செய்த போலீசார்.!

ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார். வங்காள தேசம் புறப்பட்டுச் சென்ற அவர் இந்தியா மிகச்சிறந்த நாடு என்றும் ஹோலி அருமையான பண்டிகை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஹோலிக் கொண்டாட்டத்தின் போது சில இளைஞர்கள் அவரை மானபங்கப்படுத்த முயன்றதாகவும் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகவும் அந்தப் பெண் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் புகார் ஏதும் அளிக்காத போதும் காவல்துறையினர் தாமாக விசாரணை மேற்கொண்டு வீடியோ காட்சியின் அடிப்படையில் சிறுவன் … Read more

சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து 3 நாள் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: கர்நாடக சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ல் முடிவு பெறுகிறது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் 18 வயது … Read more

'ஜே.இ.இ.' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாடு முழுவதும் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2-ம் … Read more

மும்பையில் பகீர் சம்பவம்!! பெண்ணின் மாதவிடாய் ரத்தம் ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனை..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். பின்னர், அவரது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். வரதட்சணை கேட்டு … Read more