ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையை நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

பெங்களூரு-மைசூரு இடையே 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள Expressway சாலையை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள NH-275 எனப்படும் அந்த சாலையில் 4 ரயில்வே மேம்பாலங்கள், 9 பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 89 சுரங்க பாதைகள் உள்ளன. அந்த சாலையின் மூலம் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும். கர்நாடகாவில் நாளை … Read more

ரெய்டுகளுக்கு பயந்து ஒருபோதும் கட்சி மாறமாட்டார் கவிதா: ஐதராபாத்தில் '#Bye Bye Modi' என்ற ஹேஷ் டேக்கு விளம்பரங்கள்

ஐதராபாத்: ரெய்டுகளுக்கு பயந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா கட்சி மாறமாட்டார் என்பதை குறிக்கும் வகையில் அம்மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா டெல்லியில் ஒன்றிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பாரத் இராட்டிர சமிதி தொண்டர்கள் வித்தியாசமான விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். உண்மையான நிறம் என்றும் சாயம் போவதில்லை என்ற வாசகங்கள் … Read more

ஹோலி சர்ச்சை: மார்பை தொட்ட ஆண்கள்; இந்தியாவை விட்டு வெளியேறிய ஜப்பான் பெண்.!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். நடப்பு ஆண்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டமும், அது சார்ந்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகின்றன. பெண்களின் அனுமதி இல்லாமலேயே கண்ட இடங்களில் கை வைப்பது கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், சிறுமி என்றும் பாராமல் அவளுடைய அந்தரங்க உறுப்புகளில் வண்ணப் பொடியை பூசுவதும் முத்தம் … Read more

துணை முதல்வர் கைதானது போன்று கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்!: கோர்ட்டில் ஆஜரான கைதி பேட்டி

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் கைது செய்யப்பட்டது போன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று கைதி சுகேஷ் சந்திரசேகர் கூறினார்.  ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர், டெல்லி அமைச்சர்கள், சிறைத்துறை அதிகாரிகள், சினிமா நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து டெல்லி ஆம்ஆத்மி தலைவர்கள், … Read more

மகளிர் இடஒதுக்கீடு கோரும் தார்மீக உரிமை கவிதாவிற்கு இல்லை – தெலுங்கானா பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

மகளிர் இடஒதுக்கீடு கோரும் தார்மீக உரிமை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதாவிற்கு இல்லை என பாஜக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி கவிதா நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய், பி.ஆர்.எஸ் அரசு எந்த துறையிலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், பி.ஆர்.எஸ்-ல் கவிதாவை தவிர வேறு எந்தப் பெண்களுக்கும் பங்கு … Read more

மணமகன் வீட்டாரிடம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் வரதட்சணை கேட்டு, திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

தெலங்கானா: தெலங்கானாவில் மணமகன் வீட்டாரிடம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் வரதட்சணை கேட்டு, மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திவிட்டார். அம்மாநிலத்தில் உள்ள சில பழங்குடியின மக்களிடம், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது; இரு வீட்டாரும் காவலர்கள்களிடம் முறையிட்டதில், பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனிடையே பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹப் ஹூசைன் கூறியதாவது: மணிஷ் சிசோடியா, … Read more

டெல்லியில் ஜப்பான் பெண்ணுக்கு ஹோலி கொண்டாட்டத்தின் போது பாலியல் தொல்லை..!

டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாவிற்காக இந்தியா வந்திருந்த ஜப்பான் பெண் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்தார். ஹோலி கொண்டாட்டங்களை பார்ப்பதற்காக வெளியே வந்த ஜப்பான் பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டு அவர் மீது வர்ணங்களை பூசியதோடு, தலையில் முட்டையும் உடைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து, அதேப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட … Read more

புல்வாமா தியாகியின் மனைவியை போலீசார் தள்ளிவிட்ட விவகாரம்: ராஜஸ்தானில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டை வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் மனைவியரில் 3 பேர் ராஜஸ்தான் அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர். அவர்கள் சமீபத்தில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்து தங்களது வாழ்வை முடித்து கொள்ள … Read more

ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? – லாலு குடும்பத்தினரிடம் நடக்கும் சோதனைகள் குறித்து நிதிஷ் குமார் கேள்வி

பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், இந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் (சிபிஐ) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நிலமோசடி தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் அம்மாநில துணை முதல்வருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது ஆகியவை தொடர்பாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் … Read more