எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது சிக்கல்.. கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததன் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததன் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணியதேவையில்லை என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். ஆண்டின் மற்ற … Read more
உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமயலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்து சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 புள்ளிகளாக பதிவாகியது. உத்தகாசி மாவட்டத்தின் பத்வாரி … Read more
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 15 வயது மைனர் ஒருவர் யூடியூப் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்தார், பின்னர் அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது குறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நாக்பூரின் அம்பாஜாரி பகுதியைச் சேர்ந்த சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது தாயிடம் கூறி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, பிரசவம் குறித்த … Read more
மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை திரும்பினார். தற்போது அவரது … Read more
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத 286 அரசு பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இமாச்சல பிரதேசகல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் சிம்லாவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது. மாநிலத்தில் மொத்தம் 15,313 அரசு பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.3 ஆயிரம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. 455 பள்ளிகள் பதிலாள் (டெபுடேஷன்) ஆசிரியர்கள் மூலம் இயங்குகின்றன. தொடக்கப் பள்ளிகளில் … Read more
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளியில் புலிக்குட்டிகள் இருந்ததை பார்த்த விவசாயிகள், அவற்றை நாய்கள் கடித்து இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளதாக கருதி, வீட்டிற்கு கொண்டு வந்து அறையில் பூட்டி வைத்தனர். தகவலறிந்த நந்தியாலா வனத்துறையினர் புலிக்குட்டிகளை மீட்டனர். Source link
அஜ்மீர்: தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ரூ.52 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் பைருகேடாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்வதற்காக திருச்சி போலீஸ் அதிகாரி மோகன் தலைமையிலான தமிழ்நாடு தனிப்படை போலீசார் 12 பேர் ராஜஸ்தானில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க … Read more
போபால்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் முதலமைச்சரின் அன்பு சகோதரி (லாட்லி பெஹனா) திட்டத்தை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது பிறந்தநாள் தினமான நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்குபெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,23,733. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்தது 18 தொகுதிகளில் பெண்வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர். ம.பி.யில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.79 சதவீதம் அதிகரித்துள்ளது. … Read more
டெல்லி: சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.