உலகிலேயே முதன்முறையாக நெடுஞ்சாலையில் இரும்புக்கு பதிலாக மூங்கில் விபத்து தடுப்பு: மகாராஷ்டிராவில் அறிமுகம்

புதுடெல்லி: உலகிலேயே முதன் முறையாக இரும்புக்கு பதிலாக மூங்கில் விபத்து தடுப்பு மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் ஓரங்களில் பொதுவாக இரும்பிலான விபத்து தடுப்புகள் காணப்படுகின்றன. ஆனால் உலகிலேயே முதன்முறையாக சாலையின் இருபுறமும் மூங்கில் விபத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் சந்திரபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களில் உள்ள வாணி-வரோரா தேசிய நெடுஞ்சாலையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒன்றிய ெநடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்: நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு … Read more

சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம்: காங்கிரஸ் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்னையை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்துவதாக கூறி 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் … Read more

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கம் திட்டம் தொடங்கிவைப்பு..

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லத்லி பஹ்னா யோஜனா எனப்படும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம் 23 வயது முதல் 60 வயது வரையிலான, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு குறைவாக உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. Source link

நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

இளநிலை நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கு விண்ணப்ப நடைமுறை நாளை முதல் தொடங்குகிறது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது. … Read more

‘பாஜகவில் இணைந்துவிட்டால் உத்தமர்களா.?’ – பிரதமருக்கு எதிர்கட்சிகள் கடிதம்.!

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது குறித்து 8 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர் துணை முதல்வராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா. எனவே அவரை தங்கள் பக்கம் இழுத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வளையாத மணிஷ் … Read more

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மதுபோதையில் சிறுநீர் கழித்த மாணவர்.. விமான நிறுவனம் புகார் அளித்த நிலையில் மாணவரிடம் விசாரணை!

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது கழித்த சிறுநீர் சக பயணி மீது பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏஏ292 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த மாணவர் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது சிறுநீர் கழித்ததாகவும், அது கசிந்து சக பயணி மீது பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவர் மன்னிப்பு கேட்ட நிலையில், … Read more

திடீரென குடிநீர் குழாய் வெடித்ததில் சாலையில் விரசல் ஏற்பட்டு ஸ்கூட்டரில் வந்த பெண் படுகாயம்!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற … Read more

பற்றி எரியும் திரிபுரா; பாஜகவினர் வெறியாட்டம்.!

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் முக்கிய … Read more

மருமகளை காதலித்த மாமனார்… மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை!

Rajasthan Bizarre Love: காதலில் விழுவது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் நபரிடம், நீங்கள் காதலில் விழுந்தால் என்ன செய்வது? வினோதமானது தானே! ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது மகனின் மனைவியுடன் காதலித்துள்ளார். இந்த காதலால், அந்த நபரின் பேத்தியை (மகனின் மகள்) விட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர். ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிலோர் கிராமத்தில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பவன் வைரகி சதர் … Read more

''நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டது'' – பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லி மாநில கல்வி அமைச்சராக இருந்தவருமான மணிஷ் சிசோதியா கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது … Read more