மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 10க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது. சிபிஐ, சிசோடியா தரப்பு வாதத்தை அடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை மார்ச் 10க்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி..!!

டெல்லி: ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் விவசாயிகள் பயனடைவர் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் திடீர் திருப்பம்: சங்மாவுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக எச்எஸ்பிடிபி அறிவிப்பு

ஷில்லாங்: மேகாலயாவில் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைப்பதில் ஒரு திடீர் திருப்பமாக எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

டெல்லி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

எச்சரிக்கை! இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!

நாடு முழுவதும் பரவலாக காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலமாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ஒன்றை … Read more

எச்சரிக்கை! இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!

நாடு முழுவதும் பரவலாக காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலமாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ஒன்றை … Read more

சுகாதாரம் உட்பட பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் நம்பிக்கை அளிக்கிறது: பிரதமர் மோடியை சந்தித்த பில் கேட்ஸ்

டெல்லி: சுகாதாரம் உட்பட பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் நம்பிக்கை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் பில் கேட்ஸ். பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று அவர் சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ்நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் … Read more

நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

டெல்லி: நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும்போது அது தானாகவே நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது..!!

பெங்களூரு: கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் சித்தராமையாவை போலீஸ் தடுத்து நிறுத்தியது. மகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. மாதல்விருபக்ஷாவை கைது செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியினருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சித்தராமையாவை போலீஸ் அழைத்துச் சென்றது.

நாகாலாந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. நாகாலாந்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதில் NTPP 40 தொகுதியிலும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டன. … Read more