கர்நாடகா | பிரதமர் மோடி படத்துக்கு முத்தம் கொடுத்த முதியவர் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த … Read more

குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான மருந்துகளை மருத்துவர்கள் இருப்பு வைத்திருப்பது என்பது குற்றமாகாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீதான வழக்கில் நடவடிக்கை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் நோன்பு கால சலுகை – முஸ்லிம் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதி

புதுடெல்லி: கடந்த வாரம் துவங்கிய ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்படும் நோன்பினால் பலரும் சோர்ந்து விடுவது உண்டு. இதற்காக முஸ்லிம்கள் தங்கள் அன்றாடப் பணியிலிருந்து சற்று முன்னதாக மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை முதல்வர் மம்தா கடந்த மார்ச் 26-ல் ஏற்றார். மறுநாளே முஸ்லிம் அரசு ஊழியர்களுக்காக … Read more

கேரளாவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பு ஜவுளிப்பொருட்கள் சேதம்

கேரளா: கேரளாவில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தீயில் கருகின. கோழிக்கோடு நகர் பகுதியில் ஜெயலட்சியமி என்ற துணிக்கடை 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இன்று காலை இந்த கடையின் இரண்டாவது தலத்தில் திடிரென்று தீப்பற்றி கரும் புகை வெளியேறியது. நெருப்பு மளமளவென்று பிற பகுதிகளுக்கும் பரவியதில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதமடைந்தன. அதற்குள் தகவலறிந்த மாவட்டங்களில் இருந்து 20 … Read more

ஏழுமலையான் ஊதுபத்திகளுக்கு வரவேற்பு: திருப்பதியில் 2-வது தொழிற்சாலை தொடக்கம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு பயன்படுத்தப்படும் பலடன் மலர் மாலைகள் வீணாகின்றன. இதைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் ஊதுபத்தி தொழிற்சாலையை தொடங்கியது. சுவாமிக்கு பயன்படுத்திய மலர்களின் இதழ்களை பிரித்து அவைகளை உலர வைத்து, ரசாயனம் கலந்து விதவிதமான நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ஊதுபத்திகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், 2-வது தொழிற்சாலையை தொடங்க தேவஸ்தானம் முடிவு … Read more

"சார்.. கைய விடுங்க".. நடுவானில் அலறிய விமானப் பணிப்பெண்.. விடாமல் "சில்மிஷம்".. இந்த வயசுல இது தேவையா?

மும்பை: விமானத்தில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன. விமானப் பயணமே இனி வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு படுமோசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்திருக்கிறது. நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கியிருக்கிறார் 63 வயது முதியவர். விமானத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள். சிறுநீர் … Read more

”சுயமரியாதை, சமூக நீதி போராட்டத்தின் தொடக்கம்தான் வைக்கம் போராட்டம்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றனர். வைக்கம் போராட்ட வீரர்கள் சிலைக்கு, இரு மாநில முதலமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மலையாளத்தில் பேசி தனது உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். சுயமரியாதை, சமூக நீதிக்கான போராட்டத்தின் தொடக்கமாக வைக்கம் போராட்டம் இருந்ததாகவும், தமிழ்நாடு – கேரள தலைவர்கள் இணைந்து போராடியதற்கு கிடைத்த வெற்றியை இன்று கொண்டாடப்படுவதாகவும் … Read more

திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு

*ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை *அறங்காவலர் குழு தலைவர்  தகவல் திருமலை : திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகத்தில், புதிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையத்தை திறந்து வைத்த அறங்காவலர் குழு தலைவர், ஆண்டுதோறும் ₹5 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்யவும், ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டியுள்ள ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு மையத்தை … Read more

ம.பி.கோயில் கிணறு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம நவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கிணறு மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் மீது யாகம் நடைபெற்றது. அதைச்சுற்றி ஏராளமான பக்தர்கள் அமர்ந்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீ ரென அந்த சிலாப் … Read more

டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

டெல்லி: டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை ரோகிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது ஏப்ரல் 13ல் பரிசீலனை செய்யப்படும் என்று ரோகிணி நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஆங்கில புத்தாண்டு அன்று அஞ்சலி என்ற இளம்பெண் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.