ஒடிசாவில் 13ம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலின் அடிப்பகுதி உள்ளிட்டவை பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் இன்டாக் குழுவால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படச்சனா பகுதியில் சிறிய  குன்றின் அடிவாரத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோயிலின் இடிபாடுகள் கிடந்த இடங்களில் இன்டாக் குழு ஆய்வு செய்து வந்தது. இதில் கோயிலின் அடிப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோயில் 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாக குழு தெரிவித்துள்ளது. மேலும் சற்று தொலைவில் கோயில் கலசமும் கண்டெடுக்கப்பட்டள்ளது.

ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும். கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் யானைக்குட்டி ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் இந்த குட்டியை மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன், கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையை பராமரித்து … Read more

5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1816கோடி பேரிடர் நிவாரண நிதி

புதுடெல்லி: அசாம், இமாச்சலப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரி டர் நிவாரண நிதியாக ரூ.1816 கோடி ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவானது, கடந்த 2022ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ்  கூடுதலாக ரூ.1816 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அசாம் ரூ.520 கோடி, இமாச்சலப்பிரதேசம் … Read more

மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்த கூடாது: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகள் சிறந்த மாற்றத்துக்கான மனநிலையுடன் முன்னேற வேண்டும் என்று  ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார். உத்தரகாண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தின் 124வது பேட்ஜ் ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவர்கள் டெல்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான அவர்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்போதைய நிலையை தக்க … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும் வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும்வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு  நேற்று   கூறியதாவது:   ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆளுநரின் செயலை கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டவே நாடாளுமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  ஆனால் சபாநாயகர், முதலில் ராணுவ அமைச்சரை பேச அனுமதித்தார். பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேச அழைத்தார். ஆனால் … Read more

ஒரே பாலின திருமண வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: ஏப்.18 முதல் விசாரணை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரேபாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரிய வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, பார்திவாலா   அமர்வில் விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், நெருக்கமாக இருப்பதும் குற்றமில்லை என்றாலும், இந்திய … Read more

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: இந்திய ரயில்வே சார்பில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது ஆண் பயணிகளுக்கு கட்டணத்தில் 40 சதவீதம் சலுகையும், குறைந்தபட்சம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சகாப்தி, துரந்தோ ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் இந்த சலுகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இந்த கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான  ரயில் … Read more

கடந்த எட்டு ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு செய்தது என்ன?..மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்வி வருமாறு:  பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரத்தினை மொழி மற்றும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். கடந்த … Read more

கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு சம்மன்

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்துள்ளது. மீண்டும் அவரிடம் 16ம் தேதி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு கொரண்டலாவை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22ம் தேதி உகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 21ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி … Read more