நாடு முழுவதும் 955 பேர் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

நாடு முழுக்க 955 பேரும் அதிகபட்சமாக தமிழகத்தில் 545 பேரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். நாடு முழுதும் கடந்த ஜனவரி மாதம் முதலே, இன்ப்ளூயன்ஸா எச்3என்2 என்ற வகை தொற்றால் காய்ச்சல் பரவத் துவங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், அவர் இன்புளூயன்சா … Read more

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தமிழ்ச் சங்கமத்தை பாராட்டியவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் – நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் ராமேஸ்வரத்தில் விழா

புதுடெல்லி: காசியில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன், அலகாபாத் மற்றும் அயோத்தியா பகுதிகளையும் அவர்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த பலர் காசி தமிழ்ச் சங்கமத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்தன. … Read more

மக்களவை ஒத்திவைப்பு; ராகுல் சர்ச்சையும், வீணா போகும் மக்கள் வரிப் பணமும்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) காலை தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் முதல் ரெய்டு நடவடிக்கைகள் வரை பல விஷயங்களை எழுப்ப திட்டமிட்டிருந்தன. இந்த சூழலில் லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை ஆளுங்கட்சி கையிலெடுத்தது. அவரது பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ராகுல் காந்தி பேச்சு இந்த அவையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் … Read more

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்… பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 .. புதுவை பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செயதுள்ளார் .முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய சில அறிவிப்புகள் பின்வருமாறு, *புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். *தமிழ்வளர்ச்சி,ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். *பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு … Read more

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேச்சு

புதுடெல்லி: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளும் கட்சி மதிப்பளிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார். பாஜகவை விமர்சிக்கும் வகை யில் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். தவிர நாட்டுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை … Read more

கம்யூனிஸ்டுகளை கேரள மக்களும் நிராகரிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கம்யூனிஸ்ட்டுகளை உலகம் நிராகரித்து விட்டது, அதுபோல கேரளாவும் நிராகரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் கேரள அரசியலில் எதிர் எதிராக இருந்த போதும் திரிபுராவில் கூட்டாக தேர்தலில் போட்டியிட்டதாக விமர்சனம் செய்தார். கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், அதேநேரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் … Read more

நீங்கள் வெறும் பிரதமர் மட்டுமே, கடவுள் இல்லை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பதிலடி

டெல்லி : ஜனநாயகம் மீது பாஜக நடத்தும் தாக்குதல் காரணமாகவே அது குறித்து பேச வேண்டி இருப்பதாக ராகுல் காந்தி மீதான பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திய ஜனநாயகம் குறித்து பேசி நாட்டு மக்களை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி சாடினார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த … Read more

''கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்துவிட்டது'': அமித் ஷா

திருச்சூர்: கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்துவிட்டது என்றும் அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமித் ஷா, ”கேரளாவில் ஆளும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களை எதிர்க்கும் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரசும் உள்ளன. இதில், கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்துவிட்டது. அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலையில் உள்ளனர். மற்றொரு கட்சியான காங்கிரஸ் தனக்கான அவசியத்தை இழந்து … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று ஆரம்பம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இன்று தொடங்கும் 2வது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளை கொண்டிருக்கும் என்றும், அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளை … Read more