உணவு, குடிநீர், மருத்துவ உதவி வசதிகள்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய … Read more

சென்னை மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக … Read more

லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடு – விசாரணைக்கு ஆஜராகாத கேரள முதல்வரின் செயலர்

கொச்சி: கேரள மாநில அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே, ரவீந்திரன் அமலாக்கத் துறைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘‘தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடருக்கான வேலைகளில் பரபரப்புடன் இயங்கி வருகிறேன். எனவே, தற்போது … Read more

சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ்..!!

டெல்லி: சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

கொல்கத்தா: மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அந்த ட்விட்டர் பக்கத்தின் பெயர் யுகா லேப்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. கூடவே அதன் முகப்புப் படமும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஹேக்கர்கள் அந்தப் பக்கத்தில் எதுவும் பதிவிடவில்லை. அந்தப் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. யுகா லேப்ஸ் என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ப்ளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனம் எனத் தெரிகிறது. க்ரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் ஊடகத்திலும் அவர்கள் செயல்படுகின்றனர். கடந்த ஆண்டு … Read more

புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு..!!

டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை … Read more

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை… பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி … Read more

காஷ்மீர் பண்டிட் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தசஞ்சய் சர்மா என்பவர் தீவிரவாதிகளால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர்பக்கத்தில், “காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே சிறுபான்மையினரை பாஜக பயன்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளார். Source link

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவை சந்தித்து வருகின்றது

மும்பை: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவை சந்தித்து வருகின்றது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.54 சரிந்து ரூ.1,140-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.23 குறைந்து ரூ.439-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.