புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி எஸ்.பி.தீபிகா ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்கால் எஸ்.பி. லோகேஸ்வரன் மிசோரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

எடப்பாடி தரப்பு வழக்கின் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது – ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

”எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த வழக்கின் முதற்கட்டத்தைக் கொண்டாட முடியும்; ஆனால் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது” என பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட … Read more

இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோலில் எத்தனால் கலப்பில் நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்துகிறது. இந்த பட்ஜெட் மூலம், பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 2030-க்கு முன்பே 2026-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை நாடு அடைந்துவிடும் என பிரதமர் … Read more

அதிர்ச்சி! ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் மணமகன், மணமகள்!!

வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த மணமக்கள், ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த அஸ்லாம் (24) என்பவருக்கும் காகஷா பானு (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணமக்கள் இருவரும் தங்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென பெண் அலறும் சத்தம் கேட்டது. பதற்றம் அடைந்த உறவினர்கள் அங்கு சென்று அறையின் கதவை … Read more

புதுச்சேரி முதல்வருக்கு மரியாதை தரவில்லை என குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி லோகேஸ்வரன், மிசோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்டப்பவர்களுக்கு பதிலாக, மிசோரம், டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கு புதிதாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை மாற்றி மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் இன்று பிறப்பித்த உத்தரவில், ”புதுச்சேரியில் பணிபுரியும் … Read more

அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டிஸ்; ரோகிணி ஐஏஎஸ் அதிரடி.!

கர்நாடக அரசின் அறநிலையத்துறை ஆணையராக பதவி வகித்தவர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ். அதேபோல் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுத்கில். இந்த ரூபா ஐபிஎஸ் வேறும் யாரும் இல்லை, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது அவர் ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் வசதியாக இருக்க பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறியவர் தான் இவர். இந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐபிஎஸ் அதிகாரியான ரூபா … Read more

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. ரஷ்யாவின் … Read more

குட் நியூஸ்..!! இனி நொய்டா விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும்..!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அரசு 2023-24 ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (என்ஐஏ) முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்பொழுது 2 ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் வரவிருக்கும் 5 சர்வதேச விமான நிலையங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது ஜெவார் மற்றும் அயோத்தியில் இரண்டு சர்வதேச … Read more

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

புதுடெல்லி: வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனவும், நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ்  ஆட்சி அமைக்கும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். டெல்லியில் வர்த்தக காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளை கூற முயன்றால், அதற்கு அனுமதிப்பது இல்லை. எங்கள் எம்.பி.க்களுக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத ரூ.300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (மார்ச்) சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது. மே மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login அல்லது ttdevasthanam என்ற மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் … Read more