''மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப். 24) விசாரணைக்கு … Read more

ஃப்ரீ எல்பிஜி சிலிண்டர் மற்றும் 10 லட்சம் இன்சூரன்ஸ், அரசு புதிய அறிவிப்பு

முதல்வர் பூபேந்திர படேல்: 3.01 லட்சம் கோடி பட்ஜெட்டை குஜராத் அரசு தாக்கல் செய்தது. இதில், மாநில மக்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. குஜராத் மாநில நிதி அமைச்சர் கனு தேசாய் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன, அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஆகும். காப்பீட்டு … Read more

தேர்தல்கள் குறித்து ஆலோசனை: நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர்கள் கூட்டம்

புதுடெல்லி: திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், வரும் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயாவில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் வரும் 26ம் தேதி (பிப். 26) டெல்லியில் அதன் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘நாளை மறுநாள் நடைபெறும் மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின்  முன்னேற்பாடுகள், இந்தாண்டில் … Read more

டெல்லியில் 11 வயது சிறுமி கொலை… மிஸ்டுகால் மூலம் கண்டறிந்த போலீசார்!

டெல்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருவர், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் 21 வயது இளைஞரொருவர், சிறுமியை கடத்தி கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். முன்னதாக இச்சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் தாய் காவல்துறைக்கு அளித்த புகாரில், “டெல்லி நங்லோய் பகுதியில் நான் வசித்து வருகிறேன். என்னுடைய 11 வயது மகள், கடந்த பிப்ரவரி 9ஆம் … Read more

உலக பொருளாதார சவால்களை தீர்க்கமாக எதிர்கொள்ள தயாராக வேண்டும் – ஜி20 நாடுகளுக்கு சக்திகாந்த தாஸ் அழைப்பு

பெங்களூரு: உலக பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிதி தன்மை, கடன் நெருக்கடி போன்ற சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் இன்று (பிப்.24) நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் கவர்னர்களின் கூட்ட தொடக்க நிகழ்வில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சமீப மாதங்களில் வெளிப்படையாக பார்க்கும் போது உலகப்பொருளாதாரம் … Read more

2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே

Congress Plenary Session: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இந்த காங்கிரஸ் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, “2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸின் மாநாடு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது ஒரு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் உள்ளது … Read more

பஞ்சாப்பில் கலவரம் எதிரொலி: கைதான மத தலைவரின் உதவியாளர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நேற்று நடந்த கலவரத்திற்கு காரணமான மதத் தலைவரின் உதவியாளரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற மத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் துஃபான் என்பவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் அமிர்தசரஸில் கலவரத்தில் ஈடுபட்டனர். அஜ்னாலா காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கினர். கையில் துப்பாக்கியும், வாள்களும் வந்த … Read more

டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பெங்களூருவில் இன்று (பிப். 24) நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”நிதி மற்றும் … Read more

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

சத்திஸ்கர்: காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்.சிறப்பு மாநாட்டு முடிவு பற்றி முத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்புக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் அறிவுரை

மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பணிப் பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கி வருவதாகவும், இதனை அரசுகளும் பின்பற்றும் வகையில் பொதுவான ஒரு உத்தரவாக நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒன்றாக பிறப்பிக்க வேண்டும் … Read more