டெல்லியில் உளவு பார்த்த சீன இளைஞர் கைது

பரேலி: சீனாவைச் சேர்ந்த இளைஞர் வாங் கவுஜுன். இவர் தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து டெல்லியின் பல்வேறு இடங்களில் உளவு பார்த்துள்ளார். தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்துக்காக உ.பி. போலீஸார் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போதுதான் இவர் டெல்லியின் முக்கிய இடங்களை உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இவரை விரைவில் லக்னோ, டெல்லி நகரங்களுக்கு அழைத்துச் சென்று … Read more

மகாராஷ்டிராவில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. மராட்டிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா..?

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் கசபா பேத் மற்றும் சின்ச்சிவாட் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் மகாராஷ்ட்ர அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பாஜக விடம் இருந்த இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் காங்கிரஸ்- உத்தவ்தாக்கரே கூட்டணிக்கு மிகப்பெரிய  வெற்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  மும்பை, நாக்பூர்,நாசிக், அவுரங்காபாத் மாநகராட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது Source link

காஷ்மீரில் சொத்து வரி வசூலிப்பது கண்டித்து போராட்டம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் சொத்து வரி விதிப்பதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சொத்து வரி செலுத்துவது அமல்படுத்தப்படுகின்றது. யூனியன் பிரதேசத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யூனியன் பிரதேசத்தின் முடிவை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. ஷெர் இ காஷ்மீர் பூங்கா அருகே உள்ள  கட்சியின் தலைமை அலுவலகம்  முன்பு தலைமை செய்தி தொடர்பாளர் … Read more

தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த நிலை என்ன? – மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்து நிலை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் (பிஐஎல்) கூறியுள்ளதாவது: ஓர் அரசு ஊழியர் மீதுநீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படு வார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் ஒரு வேட்பாளர், கிரிமினல் வழக்கில் குற்றவாளி என … Read more

திருப்பதி லட்டு பிரசாதம்; புதிய மாற்றம் கொண்டு வரும் தேவஸ்தானம்!

திருப்பதி லட்டு என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அதன் சுவை, மணம், தயாரிப்பு ஆகியவை தனி ரகம் என்று சொல்லத் தோன்றும். ஏழுமலையானை தரிசிப்பது பக்தி மயமான நிகழ்வு என்றால், லட்டு வாங்கி சுவைப்பது ருசிகரமான நிகழ்வு. இந்த பிரசாதத்திற்காகவே பலர் திருப்பதி செல்வது உண்டு. அதேசமயம் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கூட்டம் அலைமோதும் சூழல்களில் தவறாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் வாங்கி கொண்டு வந்து விடுவர். திருப்பதி பக்தர்கள் ஆந்திர … Read more

விவசாயிகள் உதவித் தொகையாக ரூ 16,000 கோடி வழங்குகிறார் பிரதமர் மோடி.. நாளை 8 கோடி வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது..!

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 13வது தவணை உதவித்தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் புதிதாகக் கட்டப்பட்ட சிவமொக்கா விமான நிலையத்தைப் பார்வையிட உள்ள பிரதமர், மாநிலத்தின் பெல்காவி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். சிவமொக்காவில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 300 பயணிகளை இந்த விமானநிலையம் கையாள முடியும். அத்துடன் விவசாயிகளுக்கான உதவித் … Read more

ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி உயிரிழந்துள்ளனர். கார்-லாரி மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விகாஸ் ரெட்டி. சாய் கிருஷ்ணா, பிரவீன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் போருக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

புதுடெல்லி: ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது. … Read more

இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா, இலங்கை இடையேயான 7வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி டெல்லியில் தொடங்கியது. 2 நாள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இருதரப்பு ராணுவப் … Read more

குவியும் வாழ்த்துக்கள்..!! சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் இயந்திரங்கள் மூலம் அகற்றும் முதல் மாநிலம்..!!

சாக்கடைக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவது சமூக அநீதி என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அந்த பணியை இயந்திரங்களின் மூலம் செய்ய பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் ரோபோ இயந்திரங்கள் மூலமாக அகற்றும் முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் கழிவுகளை அகற்ற பண்டிக்கூட் (Bandicoot) என்ற ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இந்த பெருமையை கேரளா பெற்றுள்ளது. கழிவுகளை … Read more