தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி 4 மாநிலங்களில் போட்டி

புதுடெல்லி: இந்த வருடம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இதனால் இந்த 9 மாநிலங்களில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, அருகிலுள்ள பஞ்சாபிலும் போட்டியிட்டு அம்மாநிலத்தை கைப்பற்றியது. கோவா மற்றும் குஜராத்திலும் போட்டியிட்ட இக்கட்சி அங்கு கணிசமான வாக்குகளை பெற்றது. எனவே இந்த … Read more

10 மூட்டை வெங்காயம் விற்பனை – விவசாயிக்கு கிடைத்ததோ 2 ரூபாய்க்கு காசோலை..!

மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூரில் விவசாயி ஒருவர் பத்து மூட்டை வெங்காயம் விற்ற தொகையாக 2 ரூபாய்க்கு காசோலை கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையாக இரண்டு ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெங்காயம் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் வெங்காய மண்டியில் குவிண்டால் 100 ரூபாய்க்கு விலை பேசப்பட்டது. 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்ட அந்த விவசாயி பத்து மூட்டை வெங்காயத்தைக் கட்டிக் கொண்டு 70 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த … Read more

கொரோனா தடுப்பூசியால் நாட்டில் 34லட்சம் உயிரிழப்புகள் தடுப்பு: ஸ்டான்ட்போர்ட் பல்கலை. ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசியால் 34லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம்  கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான பிரச்னைகளின் பொருளாதார பாதிப்பு மதிப்பீடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் … Read more

அதிர்ச்சி! ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த போலீஸ்!!

காவல்துறை அதிகாரி ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் ஆசிப் நகர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த விஷால் என்பவர், ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். அவர் வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பால் … Read more

மனிதனுக்கு மரணம் எப்போ வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்திருக்கின்றனர். ஆனாலும் பலன் … Read more

மோர்பி பால விபத்து எதிராலி – குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இப்பாலத்தின் சீரமைப்பு பணியை, சுவர் கடிகாரங்கள் மற்றும் இ-பைக்குகள் தயாரிக்கும் ஓரேவா நிறுவனம் மேற்கொண்டது. சீரமைப்பு பணிக்கு பிறகு மோர்பி நகராட்சியின் தகுதிச் சான்றிதழை பெறாமலேயே பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் திறக்கப்பட்ட … Read more

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்குதல்..!

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் இரண்டாவது நாளாக பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கடும் அமளிகளுக்கு மத்தியில் மாநகராட்சியின் நிலைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் விரட்டி அடித்ததைக் கண்டித்து அக்கட்சியினர் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கணவர் மரணம்

புனே: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத் நேற்று மரணமடைந்தார். முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தேவிசிங் செகாவத் (89) கடந்த சில நாட்களுக்கு முன் காலை நடைபயிற்சியின் போது கீழே விழுந்ததில்  எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து புனேவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட  பின்னர் அவருக்கு பல்வேறு  உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டது.  இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். … Read more

வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போல் பயன்படுத்தியது – காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு

திமாபூர்: வடகிழக்கு மாநிலமான நாகா லாந்தில் திங்கட்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 20 இடங்களிலும் அதன் அணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் திமாபூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பாடுபடுகிறது, இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இம்மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. … Read more

2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் இன்று இந்தியா வருகை.. 6 நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார். காலையில் டெல்லி வந்திறங்கும் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்,பிரதமர் மோடியும், ஓலாப் ஸ்கோல்ஸ்சும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் மோதல், இந்தோ – பசிபிக் பகுதியில் நிலவும் சூழல் மற்றும் தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, 520 கோடி அமெரிக்க … Read more