2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் இன்று இந்தியா வருகை.. 6 நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார். காலையில் டெல்லி வந்திறங்கும் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்,பிரதமர் மோடியும், ஓலாப் ஸ்கோல்ஸ்சும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் மோதல், இந்தோ – பசிபிக் பகுதியில் நிலவும் சூழல் மற்றும் தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, 520 கோடி அமெரிக்க … Read more

8 வடகிழக்கு மாநிலங்களை பாஜ அஷ்டலட்சுமியாக கருதுகிறது; மோடி பிரசாரம்

திமாபூர்: நாகலாந்து மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமாப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘முன்பு வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை இருந்தது. தற்போது அவற்றை சிறந்த நிர்வாகமாக மாற்றியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரங்களாக பயன்படுத்தி வந்தன. ஆனால் அவற்றை பாஜ தற்போது அஷ்டலட்சுமியின் வடிவங்களாக கருதுகின்றது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தை இயக்குவதற்காக பாஜ தலைமையிலான … Read more

செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம் – காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு ஒருமனதாக முடிவு

ராய்ப்பூர்: காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் சூழல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, வேளாண்மை, வேலைவாய்ப்பின்மை, சமூக நீதி உட்படபலவிஷயங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என … Read more

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தால் மாற்று தேதி கிடைக்காது: தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் பதில்

புதுடெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2023-24ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு வரும் மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “நீட் பயிற்சிக்காகவே மாணவர்கள் … Read more

குட் நியூஸ்..!! தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் மசோதா நிறைவேற்றம்..!!

கர்நாடக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இனி தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றும், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் மூன்று நாள்கள் வார விடுமுறை எடுத்துக் கொள்ளவும் சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது. பெண்களின் பணி நேரத்தில் ஒரு கட்டுப்பாடு இருப்பது … Read more

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தல் நீண்ட இழுபறிக்கு பின்னர் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி மாநகராட்சிக்கு 6 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. தேர்தலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர் பவன் ஷெராவத், பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலாளர் ஹர்ஷ் … Read more

காலத்திற்கு ஏற்ற சீர்த்திருத்தம் இல்லாததால் சர்வதேச நிதி அமைப்புகள் மீது நம்பிக்கை சிதைந்து விட்டது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: சில வளரும் நாடுகள் தாங்க முடியாத கடன் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சர்வதேச நிதி அமைப்புகள் மீதான நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும் கவலை தெரிவித்தார். இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது: நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான பெரும் … Read more

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்..!!

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீஸின் பதவிக்காலம் 2012-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தம்பதியனர் புனேவில் குடியேறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தேவிசிங் ஷெகாவத் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஷெகாவத் உயிரிழந்தார். அவரது … Read more

இந்திய பொருளாதாரத்தின் எழுச்சி உலகின் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் – ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை

பெங்களூரு: உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார எழுச்சி உத்வேகம் அளிக்கும் என்று ஜி20 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் கர்நாடக மாநிலம்பெங்களூருவில் நேற்று நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தின் எழுச்சியில் இருந்து ஜி20 நாடுகள் தேவையான உத்வேகத்தை பெறும். உலக நிலப்பரப்பில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை … Read more

நீட் பயிற்சி மைய மாணவன் தற்கொலை

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.  இதில் நாடு முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில்,நீட் பயிற்சி வகுப்பில் படித்து வந்த உபி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை முடிவு எடுத்ததற்கு நீட் பயிற்சி மையம்தான் காரணம் என அவரின் தந்தை … Read more