“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமே முக்கிய காரணம்” – ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே ஆதாரமாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப். 24) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ பதக் … Read more

வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல்: மோகன்லால் வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை வாபஸ் பெறக்கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து 6 மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கொச்சியிலுள்ள வீட்டிலிருந்து … Read more

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம்

ராய்ப்பூர்: காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எனினும், இன்றைய மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்கள் இன்றைய மாநாட்டை தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நாளை மற்றும் … Read more

திருமணத்திற்கு முந்தைய தினம் திடீர் ‘அட்மிட்’மருத்துவமனை படுக்கையில் மணமகளுக்கு தாலி கட்டிய வாலிபர்: உறவினர்கள், டாக்டர்கள் வாழ்த்து

திருமலை: திருமணத்திற்கு முந்தைய தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு நிச்சயித்தபடி மணமகன் தாலி கட்டினார். புதுமண தம்பதியினருக்கு உறவினர்கள், டாக்டர்கள் உள்பட  பலர் வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டம் பஸ்வராஜுபல்லே கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (28). இவருக்கும் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூரை சேர்ந்த ஷைலஜா (22) என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு  நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி இவர்களுக்கு நேற்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. … Read more

கர்நாடகா தேர்தல் 2023: முஸ்லீம்கள் வாக்கு செலுத்த முடியாது; பாஜகவின் பக்கா பிளான்.!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் 224 சீட்கள் இருக்கின்றன. இதில் 113 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தல் களத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் … Read more

”உலகளவில் மக்களின் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஜி20 கூட்டத்தில் விவாதம் நடைபெற வேண்டும்..” – பிரதமர் மோடி..!

நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை, ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ஜி20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார். அப்போது, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். மேலும், உலக அளவில் மக்களின் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஜி20 … Read more

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக பெங்களூருவில் சிபிசிஐடி விசாரணை

பெங்களூரு: விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக பெங்களூருவில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆசிரம நிறுவனர் ஜூபின் நண்பர் ஆட்டோ ராஜா என்பவர் பெங்களூரு தொட்டகுப்பியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து 16 பேரை பெங்களூருவுக்கு அனுப்பியதாக ஜூபின் அளித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கவுதம் அதானிக்கு கடந்த ஒரு மாதத்தில் ரூ.11.8 லட்சம் கோடி இழப்பு..!

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கவுதம் அதானிக்கு142 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் 61.6 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 11.8 லட்சம் கோடி ரூயாய் இழப்பு ஏற்பட்டு, தற்போது 7.4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகும் முன்பு உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் … Read more

சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முன்னாள் ஆளுநர் பாராட்டு..!!

கொல்கத்தா: சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கனரக சலவை இயந்திரம் வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது. பெண் சிறைவாசிகளுக்கு உதவும் வகையில் கனரக சலவை இயந்திரம் வழங்கியுள்ளது முன்மாதிரி நடவடிக்கையாகும். சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு மாநிலங்களில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் இடம்பெறும் என நம்புகிறேன். சிறை … Read more

வடகிழக்கு மாநிலங்களை பாஜக அஷ்டலட்சுமிகளாக கருதுகிறது – பிரதமர் மோடி பேச்சு

திமாபூர்: “வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. பாஜக அந்த எட்டு மாநிலங்களை அஷ்டலட்சுமிகளாக கருதிகிறது. மேலும் அதன் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது” என்று பிரதமர் மோடி தெரவித்துள்ளார். நாகாலாந்தின் திமாபூர் நகரில் நடந்த தேர்ல் பேரணி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாடு அவர்களுடைய சொந்த மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்களை மதித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். முன்பு … Read more