அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டிஸ்; ரோகிணி ஐஏஎஸ் அதிரடி.!

கர்நாடக அரசின் அறநிலையத்துறை ஆணையராக பதவி வகித்தவர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ். அதேபோல் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுத்கில். இந்த ரூபா ஐபிஎஸ் வேறும் யாரும் இல்லை, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது அவர் ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் வசதியாக இருக்க பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறியவர் தான் இவர். இந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐபிஎஸ் அதிகாரியான ரூபா … Read more

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. ரஷ்யாவின் … Read more

குட் நியூஸ்..!! இனி நொய்டா விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும்..!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அரசு 2023-24 ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (என்ஐஏ) முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்பொழுது 2 ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் வரவிருக்கும் 5 சர்வதேச விமான நிலையங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது ஜெவார் மற்றும் அயோத்தியில் இரண்டு சர்வதேச … Read more

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

புதுடெல்லி: வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனவும், நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ்  ஆட்சி அமைக்கும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். டெல்லியில் வர்த்தக காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளை கூற முயன்றால், அதற்கு அனுமதிப்பது இல்லை. எங்கள் எம்.பி.க்களுக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத ரூ.300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (மார்ச்) சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது. மே மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login அல்லது ttdevasthanam என்ற மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் … Read more

மும்பையில் நடுவழியில் தீப்பற்றி எரிந்த பேருந்து.. 400 சிஎன்ஜி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்..!

மும்பையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாடா நிறுவனத்தின் சி.என்.ஜி பேருந்து நடுவழியில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து, சுமார் 400 பேருந்துகளின் இயக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. மும்பையில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாங்கி மாநகராட்சி நிர்வாகம் இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பேருந்துகளில் சி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் டாடா நிறுவனத்தின் 400க்கும் மேற்பட்ட பேருந்துகளும் அடக்கம். அவற்றில் 2 பேருந்துகள் ஏற்கனவே தீ விபத்துக்குள்ளான நிலையில், நேற்று மேலும் … Read more

போதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கு நூதன தண்டனை

திருமலை: போதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கு, மாலை 6 மணி வரை கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகர் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 52 பேர் பிடிபட்டனர். அவர்களை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கும் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் உள்ள குப்பைகளை மாலை … Read more

காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அசாம் போலீசார் இன்று (பிப்.23) கைது செய்தனர். டெல்லியிலிருந்து சத்தீஸ்கரின் ராய்பூருக்கு இண்டிகோ விமானத்தில் செல்ல இருந்தவரை தடுத்து நிறுத்தி, விமானத்திலிருந்து … Read more

வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை; அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!

உத்தரபிரதேச பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி 18ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு … Read more

பிரதமர், அதானி உறவை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு கைதான சிறிது நேரத்திலேயே இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து விமானம் எரிய போது CISF வீரர்களால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவருடன் சென்ற காங்கிரஸ் மூத்த … Read more