பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது – பிரதமர் மோடி

புதுடெல்லி: பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்று பிரதமர் மோடி இன்று(பிப்.23) தெரிவித்தார். தொடர்ந்து அதில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி, 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமை வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “பசுமை எரிசக்தித்துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நான் பங்குதாரர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு முதலீடு … Read more

புதுச்சேரி சட்டமன்றத்தில் மார்ச் 13-ல் முழு பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தில் மார்ச் 13-ல் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல்

டெல்லி: மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.80,000 மதிப்புள்ள ஜீன்ஸ், விலை உயர்ந்த ஷூக்கள், ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர்,டெல்லி மண்டோலி சிறை அறையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்டது. திடீர் சோதனையில் ஆடம்பர பொருட்கள் … Read more

சமூக விரோத கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது: சோதனையைத் தொடர்ந்து என்ஐஏ நடவடிக்கை

புதுடெல்லி: லாரன்ஸ் பிஷ்னோய், ஜக்கு பக்வான்பூரியா, கோல்டி பிரார் உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுடன் தொடர்புடைய 6 பேரை தேசிய புலனாய்வு முகமை இன்று பிப்.23 ஆம் தேதி கைது செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொர்ந்து இன்று வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் 6 பேரை கைதுசெய்துள்ளனர். லக்கி கோஹர், லக்வீர் சிங், … Read more

வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம்: IOCL விளக்கம்

மும்பை: வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும் என பரவும் செய்தியில் உண்மையில்லை எனவும் IOCL  விளக்கமளித்துள்ளது.

100 மோடி, அமித்ஷா வந்தாலும் மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் – மல்லிகார்ஜுன கார்கே உறுதி

கொஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. நாகாலாந்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: ‘என்னால் மட்டுமே நாட்டை எதிர்கொள்ள முடியும். என்னை யாரும் தொட முடியாது’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். எந்த ஜனநாயகவாதியும் இதுபோல் கூறுவதில்லை. மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையும். இதற்காக இதர கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இல்லையென்றால் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் மறைந்து போகும். … Read more

DTEA Centenary: தில்லித்‌ தமிழக்‌ கல்விக்‌ கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

புது தில்லி: தில்லித்‌ தமிழக்‌ கல்விக்‌ கழக நூற்றாண்டு விழாக்‌ கொண்டாட்டத்தின்‌ தொடக்கவிழா புதன் கிழமை (பிப்ரவரி 22) தில்லியிலுள்ள இந்திராகாந்தி உள்‌ விளையாட்டரங்கில்‌ மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தில்லித்‌ தமிழ்க்‌ கல்விக்‌ கழகம்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ டிரஸ்ட்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ பேனியன்‌ அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளாலும்‌ சேர்ந்து நடத்தப்பட்டது. ஒரு மாணவன்‌ ஓர்‌ ஆசிரியருடன்‌ 1923 ஆம் ஆண்டு மதராஸி எஜூகேசன்‌ அசோசியேசன்‌ என்ற பெயரில்‌ ஆரம்பிக்கப்பட்ட இக்‌கல்வி நிறுவனம்‌, இன்று தில்லித்‌ … Read more

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 19%-ல் 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். டெல்டா மாவட்டங்களில் பருவரும் தவறி பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் குழு டெல்டா மாவட்டங்கள் ஆய்வு செய்ததற்கு பின்பாக 19%-ல் … Read more

நிலைகுழு உறுப்பினர் தேர்தல்: மாற்றிமாற்றி தாக்கிகொண்ட ஆம்ஆத்மி-பாஜகவினர்! அவை ஒத்திவைப்பு!

டெல்லி நிலை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் இரவு முழுவதும் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிய மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு பிறகு சில மணி நேரங்களிலேயே, நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அப்போது அவைக்குள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி … Read more

காப்பி அடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை – உ.பி.யில் 6.5 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை

லக்னோ: உ.பி.யில் மாநில பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் காப்பி, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக, மாணவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வுக்கூடத்தில் அனுமதித்தல், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக தேர்வின் இரண்டாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான இந்தி தேர்வுக்கு சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் … Read more