டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய்; 34 ஓட்டுகளில்… ஆம் ஆத்மிக்கு கிடைத்த பெரிய வெற்றி!

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றனர். இதன்மூலம் டெல்லி மாநகராட்சியை முதல்முறை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. டெல்லி மேயர் தேர்தல் மேயர் நாற்காலி ஆம் ஆத்மிக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவும் போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தியது. அதுமட்டுமின்றி … Read more

அதிர்ந்த கட்டிடங்கள்..!: இலங்கை, நேபாளத்தில் லேசான நில அதிர்வு.. மக்கள் பீதி..!!

டெல்லி: சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர். அங்கு 20 நாட்களுக்கும் மேலாக மீட்புக்கணி நீடித்தது. இந்நிலையில், துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலை முதலே இந்தியாவில் பல பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. அதன்படி உத்தரகாண்ட், டெல்லி, நேபாளம் உள்பட பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி

புதுடெல்லி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று (பிப்.22) டெல்லி மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்றார். பாஜகவின் வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, “குண்டர்கள் தோற்றனர், … Read more

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

“100 மோடிகள், அமித் ஷாக்கள் வந்தாலும் வரட்டும்…” – கார்கே பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: “வரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும்” என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டை என்னால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்; எவர் ஒருவரும் என்னைத் தொட முடியாது என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி … Read more

இமயமலை பிரதேசத்தை எந்த நேரமும் பூகம்பம் தாக்கலாம்! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இமயமலைப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) கணித்துள்ளது. NGRI என்னும் புவியியல் ஆராயச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ், இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக ஐந்து சென்டிமீட்டர்கள் நகர்கிறது என்றும் இதனால் இமயமலையில் அழுத்தம் உருவாகிறது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் கூறினார். பூமியின் மேற்பரப்பு தொடர்ச்சியாக இயக்கத்தில் இருக்கும் பல தட்டுக்களால் ஆனது என்பது … Read more

1-ம் வகுப்பில் சேர 6 வயது நிறைவு கட்டாயம் : அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : 6 வயது முடிந்த பிறகே முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடக மாணவிகளின் மனுவினை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடகாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க கோரி முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுவினை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதகாக தலைமை நீதிபதி சந்திரசூட் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகளில் சிலர் இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மாணவிகள் … Read more

ரயிலில் உணவு ஆர்டர் செய்வர்களுக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

இந்திய ரயில்வேயின் உணவு: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. இனி நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி ரயில்வே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி மக்கள் ரயில்வேயில் விலை (indian railways food price list) உயர்ந்த உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வு ரொட்டி முதல் தேநீர் வரை அனைத்திலும் பொருந்தும். மெனுவில் பல புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளரயில்வே உணவு … Read more

தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச்செயலகத்திலிருந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி முலம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள ஆலோசனையில், கலந்துகொள்கிறார். ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.