அதிகமான விமானநிலையங்கள், சிறந்த இணைப்பு வசதி மக்களை நெருக்கமாக்குகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி: விமான போக்குவரத்து துறை, அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் மக்களை நெருக்கமாக கொண்டு வருவதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (பிப்.22) தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணம், பிப்,19 ஆம் தேதி 4.45 லட்சம் என்ற புதிய இலக்கைத் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் பதிவில்,”அதிக விமான நிலையங்கள், சிறந்த … Read more

இந்திய டெக்டானிக் பிளேட் 5 செ.மீ. நகர்கிறது… உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் : விஞ்ஞானிகள் தகவல்!!

டெல்லி: இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ.மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ் கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளில்  நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 6ம் தேதி துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து,  பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஜப்பான் என பல நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக … Read more

மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அனுமதி

புதுடெல்லி: சட்டத்துக்குப் புறம்பாக உளவு அமைப்பை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாகம் துணைநிலை ஆளுநருக்கு உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்புச் சட்டத்தில் விசாரிக்க சிபிஐ அமைப்புக்கு அனுமதி வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. 2015 வழக்கு: 2015ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தபோது … Read more

நேர்மைக்கு உதாரணம் பாஜக! நேர்மையானவர்களின் பதவியை பறிப்பது காங்கிரஸ்? எஸ்.ஜெய்சங்கர்

புதுடில்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியில், தனது தந்தை டாக்டர் கே.சுப்ரமணியம் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விவகாரம் மிகப் பெரிய பேசுபொருளாகிவிட்டது. தனது தந்தையும் நாட்டுக்கு சேவையாற்றிவர் என்று கூறும் தற்போதைய மத்திய வெளியுறவு அமைச்சர, 2019ல் மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்தது முதல், தனது தந்தையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நீக்கியது தொடர்பாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். செய்தி நிறுவனம் ANI க்கு அளித்த பேட்டியில், ஜெய்சங்கர், ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணியாற்றிய தான், … Read more

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3 தங்கத்துடன் இந்தியா முதலிடம்.!

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 16க்கு 8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலியன் உல்பெர்க்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே, கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் நர்மதா நிதினுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார். மற்றொரு பிரிவில் வருண் தோமர்-ரிதம் சங்வான் இணை தங்கம் … Read more

கேரளத்தில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை..!!

திருவனந்தபுரம்: கேரளத்தில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். எர்ணாகுளம் செங்கமநாட்டை சேர்ந்த சாரங், அதிதி தம்பதியின் குழந்தைக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டது. குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருந்தை வரவழைத்து சிகிச்சை அளிக்க ரூ.17.4 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த சாரங் – அதிதி … Read more

இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதை சமீபத்திய … Read more

டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மும்பைக்கு செல்லவேண்டிய விமானம் தாமதத்தால் நள்ளிரவில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு மும்பை சென்றது.

பாஜக ஆட்சியில் வடகிழக்கில் வன்முறை 70% குறைந்தது – மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

கொஹிமா: நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகாலாந்தின் துன்சாங் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாகா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முயற்சி பலனளிக்கும் என நம்புகிறேன். கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகள் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. … Read more

“ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்” – மத்திய அமைச்சர்

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக நடப்பாண்டின் பிற்பகுதியில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகள் தாமதமாகி விட்டதாகக் குறிப்பிட்டார். நடப்பாண்டின் இரண்டாம் பகுதியில் ககன்யான் திட்டத்தின் இரண்டு தொடக்கப்பணிகள் நடக்கும் என்று குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலமும், இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற ரோபோவும் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். ககன்யான் ராக்கெட் புறப்பட்ட … Read more