கடும் குளிர், அடர் பனி காரணமாக சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிகையைத் தொடர்ந்து. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும்,  வெளியில் செல்லும் போது கட்டாயம் முகத்தை மறைத்துச் செல்லவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சில நகரங்களுக்கு பனி தொடர்பாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  Source link

ஜம்மு, காஷ்மீரில் பனிச்சரிவு 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை விமான போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருப்பினும் விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டாரில் உள்ள கிராமத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. ஆனால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று … Read more

8 ஆவது வந்தே பாரத் – பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்!….

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சியின் வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்கின்றனா். இந்த … Read more

அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது – அமர்த்யா சென் நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என்று அமர்த்யா சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க, மாநில கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அடுத்த பிரதமராகும் திறன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்ளது. அதேநேரத்தில், பாஜகவுக்கு எதிராக அதிருப்தியில் உள்ள மக்கள் சக்தியை ஒன்று திரட்ட முடியும் … Read more

டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்த போலீசார்.!

டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த தீபாவளிக்கு இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக … Read more

இமாச்சலில் ஆதரவற்றோர் ஆடை வாங்க ரூ.10,000 உதவி

சிம்லா: இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு சிம்லாவின் பசந்த்பூர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர், , ”முதியோர், அநாதை இல்லங்கள், ஆதரவற்ற பெண்கள் விடுதி, மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்டோருக்கான இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு பண்டிகைக்கால உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுதோறும் கோடைகால ஆடைகளுக்காக 5,000 ரூபாயும், குளிர்கால ஆடைகளுக்காக 5,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று கூறினார்.

எந்த சவாலையும் சந்திக்க முப்படைகளும் தயார் – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உறுதி

புதுடெல்லி: முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவத்தினர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு 7-வது முன்னாள் ராணுவத்தினர் தினத்தை டெல்லி, டேராடூன், சென்னை, சண்டிகர், புவனேஸ்வர், ஜூஹுன்ஜுனு, ஜலந்தர், பனாகர், மற்றும் மும்பை ஆகிய 9 இடங்களில் … Read more

காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 2 பேர் பலி

மெஹ்சானா: குஜராத்தில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததில் சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர். குஜராத்தில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி பல பகுதிகளில் இளைஞர்கள் காற்றாடி பறக்க விட்டனர். மேஹ்சனா மாவட்டம் விஸ்நகர் பகுதியில் கிருஷ்ணா தாக்குர்(3) என்ற சிறுமி அவரது தாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  காற்றாடி நூல் அவரது கழுத்தை பதம் பார்த்தது. இதில் அவர் பலியானார். இதே போல், வதோதராவில் பைக்கில் சென்ற சுவாமிஜி யாதவ் என்பவரின் கழுத்தை காற்றாடி … Read more

சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு

புதுடெல்லி: வடஇந்தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள், சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டுவது உள்ளிட்டவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் … Read more

நாட்டின் 8 வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாட்டின் 8வது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். தெலுங்கு பேசும் தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ரயில் இது. சென்னை-மைசூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை அடுத்து தென் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். சுமார் 700 கிலோமீட்டர் தூரம் இது பயணிக்கிறது.புதிய வந்தே பாரத் ரயிலின் படங்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. Source … Read more