காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 2 பேர் பலி

மெஹ்சானா: குஜராத்தில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததில் சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர். குஜராத்தில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி பல பகுதிகளில் இளைஞர்கள் காற்றாடி பறக்க விட்டனர். மேஹ்சனா மாவட்டம் விஸ்நகர் பகுதியில் கிருஷ்ணா தாக்குர்(3) என்ற சிறுமி அவரது தாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  காற்றாடி நூல் அவரது கழுத்தை பதம் பார்த்தது. இதில் அவர் பலியானார். இதே போல், வதோதராவில் பைக்கில் சென்ற சுவாமிஜி யாதவ் என்பவரின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்ததால் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.