கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் 60,000 பேர் உயிரிழப்பு

டெல்லி: கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் 60,000 பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா பாதிப்பால் சீனாவில் 60,000 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா விதிகளை தளர்த்தியதற்கு பிறகு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தோற்று காரணமாக ஏற்பட்ட நுரையீரல் செயலிழப்பால் 5,503 பேர் உற்பட 60,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைவு: இந்திய ஒற்றுமை யாத்திரை தற்காலிக நிறுத்தம்

லூதியானா: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவை அடுத்து, சனிக்கிழமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை லூதியானா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி … Read more

பயிற்சிக்காக ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் வீராங்கனையின் உடல் சடலமாக மீட்பு: ஒடிசா கிரிக்கெட் சங்கம் அதிர்ச்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பயிற்சிக்காக ஓட்டலில் தங்கியிருந்த வீராங்கனையின் உடல் சடலமாக மீட்கப்பட்டதால், அம்மாநில கிரிக்கெட் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மங்களாபாக் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜ்ஸ்ரீஸ்வைன் என்பவர் கடந்த 11ம் தேதி மாயமானதாக குருதிஜாதியா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார், ராஜ்ஸ்ரீ ஸ்வைனை பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் குருதிஜாதியாயின் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ராஜ்ஸ்ரீயின் உடல் மற்றும் ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்பட்டது; … Read more

'2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 50 இடங்களை இழக்கும்' – சசி தரூர் ஆருடம்

கடந்த 2019ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைப் போல ஒன்றை பாஜகவால் நிச்சயம் அடுத்த தேர்தலில் அடைய முடியாது என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். கேரள இலக்கிய விழாவில் நேற்று பேசிய திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், “2019இல் பாஜக பெரிய வெற்றியை அறுவடை செய்ய காரணம் என்னவென்றால், அவர்கள் ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் வென்றனர். பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் மாநிலங்களில் ஒரு … Read more

“அரசியலில் எப்போதுமே வெற்றி, தோல்விகள் இருக்கும்” – ஜெய்ராம் ரமேஷ்

லுதியானா: அரசியல் என்பது சித்தாந்தம் சார்ந்தது என்றும், இதில் எப்போதுமே வெற்றியும் தோல்வியும் இருக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பயணித்து வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், லுதியானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பஞ்சாபிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இது சிந்தாந்தத்திற்கான போராட்டம். இது நீண்ட காலத்திற்கு இருக்கும். … Read more

பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்

பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சங்தோக் சிங் சவுதரி மாரடைப்பால் உயிரிழந்தார். ஃபில்லாவூரில் இன்று காலை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தார்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். 76 வயதான சவுதரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் … Read more

இமாச்சலில் இன்று நிலநடுக்கம்

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலாவில் இருந்து கிழக்கே 22 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஜனவரி 5ம் தேதி, டெல்லி – என்.சி.ஆர், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் … Read more

பிறப்பையும் இறப்பையும் ஒன்றாய்ச் சந்தித்த இரட்டையர்கள்.. ராஜஸ்தானில் நடந்த சோக விநோதம்!

ராஜஸ்தானைச் சேர்ந்த இரட்டையர்கள் ஒரேநேரத்தில் ஒன்றுபோல மரணத்தைத் தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமேரும், சோஹன் சிங்கும் இரட்டையர்கள் ஆவர். இருவரும் 26 வயது இளைஞர்கள். ஆனால் இருவரும் தற்போது வெவ்வேறு மாநிலங்களில் இடம்பெயர்ந்து இருந்தனர். சுமேர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சோஹன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக ஜெய்ப்பூரில் பயிற்சி எடுத்து வந்தார். அதாவது, அவர்கள் இருவரும் 900 கி.மீட்டர் தொலைவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் … Read more

திரிபுராவில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் ஈரோட்டில் நல்லடக்கம்..!

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (38). இவருடைய மனைவி நித்யா. இந்தத் தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து, திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவியுடன் போனில் பேசுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசினார். அப்போது திரிபுராவில் கடும் குளிர் நிலவி … Read more

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் மிரட்டல்

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்திற்கு இன்று மூன்று முறை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இங்கு இவருக்கு அலுவலகம் உள்ளது. இந்நிலையில், இந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கு இன்று காலை 11.30 மணிக்கும், 11.40 மணிக்கும் தொலைபேசி மூலம் பேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் … Read more