பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி சந்தோக்சிங் மருத்துவமனையில் உயிரிழப்பு

பஞ்சாப்: பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி  சந்தோக்சிங் மருத்துவமனையில் காலமானார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட எம்பி சந்தோக் சிங் சவுத்ரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கொச்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: 200 லாட்ஜ்களில் திடீர் சோதனை

கொச்சியில் போதைப்பொருள் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் சட்டவிரோத போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லாட்ஜ்கள், ஓயோ அறைகள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொச்சியில் உள்ள சுமார் 200 லாட்ஜ்கள் மற்றும் … Read more

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு கொரோனா!….தீவிர சிகிச்சை…

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து பிராணவாயு சிகிச்சையில் உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. அதன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்பின் … Read more

இந்தியாவில் வலுவான போக்குவரத்து வசதி அவசியம் – உலகின் நீண்ட தூர கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லும் ‘எம்.வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகருக்கு சொகுசு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் கொல்கத்தாவில் தயா ரிக்கப்பட்டது. இந்த கப்பலை ‘ஹெரிடேஜ் ரிவர்ஸ் ஜர்னிஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது. உலகிலேயே ஆற்றில் … Read more

அனைத்து நாடுகளுக்கும் எந்தத் தடையுமின்றி மருந்துகள் கிடைக்க வேண்டும் – பிரதமர் மோடி

உலகமயமாக்கல் மனித நேயத்தை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். Voice of Global South இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மருந்துகள் விநியோகம் அனைத்து நாடுகளுக்கும் எந்தத் தடையுமின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். கடந்த மூன்று ஆண்டுகள் வளரும் நாடுகளுக்கு பொருளாதார நிலை பெரும் சவாலாக இருந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். கோவிட் பரவல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, … Read more

12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்தது ஜோஷிமத் நகரம்: இஸ்ரோ மையம் தகவல்

புதுடெல்லி: உத்தரக்காண்டின் ஜோஷிமத் நகரம் கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. பூமியில் புதைந்ததாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பத்ரிநாத், கேதர்நாத், ஹேமகுந்த் சாகிப் உள்பட புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் ஜோஷிமத் நகரமே பூமியில் புதைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு … Read more

எல்லையில் வீரர்களை குவித்துள்ளது சீனா – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் பாண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) கிழக்குப் பகுதிகளில் சீன ராணுவம் வீரர்களை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டோக்லாமில் சீன ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கிழக்கு லாடக்கிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை யிலான 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு வலுவான நிலையில் உள்ளது. போதுமான படைகள் தயார் நிலையில் … Read more

கிறிப்டோ கரன்சி சூதாட்டம் போன்றது… ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து

கிறிப்டோ கரன்சியை வங்கிகள் கையாளுவதைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.  கடந்த அக்டோபர் முதல் மொத்த கொள்முதலாளர்களுக்கும் பின்னர் சில்லரை வர்த்தகர்களுக்கும் இது பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் கிறிப்டோ கரன்சி சூதாட்டம் போன்றது என்றும் சூதாட்டத்தை அனுமதித்தால் அதற்கான விதிகளுடன்தான் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். கிறிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது என்றும் கூறிய … Read more

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது, கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் காணாமல்போன கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் (26) என்பவர், கடந்த 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர், கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில், கட்டாக் மாவட்டத்தின் அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது … Read more