பொங்கல் விழா சீட்டு நடத்தி 8 கோடி ரூபாய் மோசடி: 3 பேர் கைது

திருமலை: பொங்கல் விழா என்ற பெயரில் சீட்டு நடத்தி 24 ஆயிரம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் கோண்டகரகம் கிராமத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பலராஜ். இவர் அப்பகுதி மக்களிடம் ‘சங்கராந்தி கானுகா’ (பொங்கல் விழா) என்ற திட்டத்தில் மாதம் ரூ.300 என ஆண்டுக்கு ரூ.3,600 செலுத்தினால் சங்கராந்தி பண்டிகையின்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை 24 விதமான மளிகை … Read more

ஜன. 31 – ஏப். 6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு!

“நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும்,” என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து உள்ளார். மொத்தம் 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு வரும் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் … Read more

போலி செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: போலி செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்பாக சில யூடியூப் சேனல்களில் போலி செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. அந்த செய்திகளின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேற்கண்ட சில யூடியூடிப் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் யாவும் போலி என உறுதி … Read more

2023-ன் நிதிநிலை அறிக்கையை எப்போது தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோருடன் ஆலோசனையை நடத்தியுள்ளார். ஜனவரி 31 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ தலைமையில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் … Read more

எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல்: பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வாரணாசி: உலகின் நீளமான நீர்வழித்தட பயணம் மேற்கொள்ளும் எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.13) காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்துனுடன் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பிரதமரின் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசியில் இருந்து எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை இன்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி … Read more

பிஎஃப்ஐ சதி வழக்கில் ராஜஸ்தானில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி: பிஎஃப்ஐ சதி வழக்கில் நேற்று ராஜஸ்தானில் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது சோதனையின் போது, டிஜிட்டல் சாதனங்கள் (மொபைல் போன்கள், சிம் கார்டுகள்), கூரிய முனைகள் கொண்ட கத்திகள் மற்றும் குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டா மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.  அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் PFI உறுப்பினர்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் மற்றும் அவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் மற்றும் வன்முறைச் செயல்களை ஊக்குவிக்கும் … Read more

சபரிமலை மகர விளக்கு பூஜை: 2வது நாளாக திருவாபரண பெட்டி ஊர்வலம்!

மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அனுபவிக்கப்படும் திருவாவாரண பெட்டிகள் ஊர்வலம் இரண்டாம் நாளாக இன்று தொடர்ந்தது. இன்றைய தினம், ஆரன்முளாவில் இருந்து பெருநாடு புறப்பட்டது. சபரிமலையில் மகர சந்திரம பூஜை மற்றும் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திரு ஆபரணங்கள் அடங்கிய மூன்று பெட்டிகள் ஊர்வலமாக ஜனவரி 12ம் தேதி புறப்பட்டது. பந்தளம் ஸ்ராம்பிகல் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினர் … Read more

MV Ganga Vilas: வாரணாசி டூ திப்ரூகர்… கங்கை நதியில் உலகின் மிக நீண்ட கப்பல் பயணம்!

இந்தியாவின் புனித நதியாக கருதப்படும் கங்கையில் உலகின் மிக நீண்ட கப்பல் பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? இது கனவாக இருந்த சூழலில் இன்று நிஜமாகி உள்ளது. இனிமேல் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை ஜாலியாக ஒரு கப்பல் பயணம் செல்லலாம். இதற்கான விதையை பிரதமர் மோடி இன்று போட்டுள்ளார். வாரணாசியில் தொடங்கி வைப்பு அதாவது, கப்பல் சேவையை காணொலி காட்சி வாயிலாக வாரணாசியில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது, … Read more

பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

டெல்லி : பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல சேவைகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளைப் ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையின் போது அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பான் கார்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்படத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு பிரதமர் … Read more

சீரடிக்கு புனித யாத்திரை சென்ற 10 பேர் சாலை விபத்தில் மரணம்; மேலும் சிலர் கவலைக்கிடம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று  காலை நடந்த சாலை விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-சின்னர் சாலையில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். தகவலின்படி, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 7 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் சின்னார் கிராமின் மருத்துவமனை மற்றும் யஷ்வந்த் மருத்துவமனைகளில் … Read more