இந்தியாவில் பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை: உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு  வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்க படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள … Read more

சீன எல்லையில் பதற்றம்… இந்திய பீரங்கிப்படையில் பெண் அதிகாரிகள் எப்போது நியமிக்கப்படுவர்?

“எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் குறைந்துள்ளபோதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார். இதுகுறித்து அவர், வருடாந்திர ராணுவ தின செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ராணுவ தின செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், “வடக்கு எல்லையில் நிலைமை சீராக இருப்பதுடன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. நம்முடைய ராணுவம் தயார் நிலையில் இருப்பதால், எதையும் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளது. இரு நாட்டு (இந்தியா – சீனா) பேச்சுவார்த்தையில் உள்ள ஏழு பிரச்சினைகளில் தற்போது ஐந்து … Read more

-4°C | வட இந்தியா இன்னொரு குளிர் அலையை எதிர்கொள்ள வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து

-4°C என்ற அளவுக்கு வெப்பநிலை சரியக்கூடிய சூழல் இருப்பதால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் இன்னொரு மோசமான குளிர் அலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் நவ்தீப் தஹியா என்ற வானிலை ஆய்வாளர். லைவ் வெதர் ஆஃப் இந்தியா என்ற ஆன்லைன் வானிலை தளத்தின் நிறுவனரான நவ்தீப் தனது வாழ்நாளில் இந்த அளவுக்கு வெப்பநிலை சரிந்ததை கண்டதில்லை என்று கூறுகிறார். ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை … Read more

துணை குடியரசு தலைவருக்கு மறுப்பு தெரிவித்த ப.சிதம்பரம்.!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 83-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் பேசும்போது, ‘‘ஜனநாயகத்தின் சாராம்சம், மக்களின் ஆணையின் மேலோங்கி அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் உள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்கும் சட்டத்தை கையாள்வதற்கும் பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு எந்த அதிகாரத்திற்கும் உட்பட்டது அல்ல. இது ஜனநாயகத்தின் உயிர்நாடி. இது உங்களின் சிந்தனையுடன் கூடிய பரிசீலனையில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அதிகரித்து வரும் இடையூறுகள் கவலை அளிப்பதாக உள்ளது. … Read more

'10 நாட்களுக்குள் ரூ.164 கோடி செலுத்தாவிடில் கட்சியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்': ஆம் ஆத்மிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசால் கெஜ்ரிவால் அதிர்ச்சி..!!

டெல்லி: ஆம் ஆத்மீ கட்சி 164 கோடி ரூபாயை 10 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் கட்சியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்தது என்பது துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டாகும். 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு துணை நிலை ஆளுநர் சக்சேனா கடந்த டிசம்பர் 20ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். … Read more

சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது: ராணுவத் தளபதி

புதுடெல்லி: சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவ தின விழாவை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”சீனாவை ஒட்டிய எல்லையில் அந்நாடு தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாகவே இருக்கிறது. எனினும், … Read more

ஜோஷிமத் நிலச்சரிவு எதிரொலி; ராணுவ துருப்புகள் இடமாற்றம்.!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்தது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஜோஷிமத் நகரில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி, சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்கள்

*அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் சித்தூர் : பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி மற்றும்  சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்களை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.சித்தூர் மாவட்டம், பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி மற்றும்  சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்களை நேற்று வனத்துறை மற்றும் சுங்கத்துறை மின்சார துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் விவசாயிகளுக்கும், வீடு இல்லாத … Read more

அரசியல் விளம்பர விவகாரம்: ரூ.164 கோடியை திருப்பி செலுத்த ஆம் ஆத்மிக்கு அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: அரசு பணத்தில் அரசியல் விளம்பரம் செய்தற்காக ரூ.164 கோடியை திருப்பி செலுத்தும்படி, ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி தகவல் மற்றும் விளப்பரத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் இந்தத் தொகையைத் திருப்பி செலுத்தத் தவறினால் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கடந்த டிச.-20-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அரசு பணத்தை அரசியல் விளம்பரங்களுக்காக … Read more

'10 நாளில் ரூ.164 கோடி செலுத்துங்க.. இல்லன்னா..' – ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்!

அரசியல் விளம்பரங்களுக்காக செலவு செய்த 164 கோடி ரூபாயை 10 நாட்களில் செலுத்தும்படி, ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு, டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது. டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, கடந்த 2015 – 2016 ஆம் … Read more