நீங்கள் மீண்டும் புதிய கேஒய்சி (KYC) விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா? RBI கூறுவது என்ன..!

Do You Need To Submit Fresh KYC Details Again: ஒருவர் வங்கியில் கணக்கைத் திறக்கும்போது, அவரது அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை (Identity) சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உட்பட பல ஆவணங்களை வங்கி உங்களிடம் கேட்கிறது. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கியில் கணக்கைத் திறந்தவுடன், மீண்டும் இந்த ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு வங்கி உங்களிடம் கேட்க முடியுமா? என்ற கேள்வி வங்கி வாடிக்கையாளரின் மனதில் எழலாம். … Read more

216வது பிறந்த நாளையொட்டி ஒட்டார ஓபன்னாவின் படத்திற்கு பாலாபிஷேகம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னாவின் 216வது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சித்தூர் காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னாவின் 216வது பிறந்த நாளையொட்டி நேற்று அவரது படத்திற்கு மாவட்ட ஒட்டர் சங்கத்தினர் மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்தனர். அப்போது, மாவட்ட ஒட்டர் சங்க பொதுச்செயலாளர் ரவி பேசியதாவது: சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னா ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் … Read more

பாஜகவில் இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி உரிமம்

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கைத்துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனை டெல்லி போலீசார் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த 2022 மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரது கருத்திற்காக அந்த கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். … Read more

ஒடிசாவில் 15வது உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர்: சிலிர்க்க வைக்கும் இசை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்

ஒடிசா: ஆடவருக்கான 15வது உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா சிலிர்க்கவைக்கும் இசை நிகழ்ச்சி, கண்கவர் வானவேடிக்கைகளுடன் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அரங்கேறியது. தேசிய விளையாட்டாக போற்றப்படும் ஹாக்கி ஆட்டத்திற்கான உலகக்கோப்பை சாம்பியன் போட்டி. 1971ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தொடரின் 15 வது பதிப்பு ஒடிசாவில் வரும் 13ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இந்தியா இரண்டாவது முறையாக இத்தொடரை நடத்துகிறது. … Read more

“அனைத்திற்கும் மேலானது அரசியலமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” – தன்கரின் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடெல்லி: “நமது நாட்டில் அனைத்திற்கும் மேலானது அரசியலமைப்புதானே தவிர நாடாளுமன்றம் அல்ல” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண்மையை நீதித் துறை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியை நீதித் துறை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீதான தீர்ப்பின்போது, … Read more

ஆளுநரின் பேரவை உரை குறித்து குடியரசு தலைவரிடம் விளக்கினோம்; எம்பி டி.ஆர்.பாலு

டெல்லி: சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி நடந்துகொண்ட விதம் பற்றி குடியரசுத் தலைவரிடம் கூறினோம் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் திமுக எம்பி டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். உரையில் உள்ள சில பத்திகளை ஆளுநர் ரவி தவிர்த்து பேசியது பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையீடு செய்தோம். மனுவை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார் எனவும் கூறினார்.  

திருப்பதி: அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி விழா உற்சாக கொண்டாட்டம்

திருப்பதியில் அமைச்சர் ரோஜா தலைமையில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். திருப்பதியில் உள்ள போலீஸ் கவாத்து மைதானத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா தலைமையில் நேற்றிழரவு சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ்பி.பரமேஸ்வர ரெட்டி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முதலில் அமைச்சர் ரோஜா உட்பட பெண்கள் மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து கோழிப் பந்தயம், … Read more

"உலகின் பெரும்பாலான சவால்கள் தென்பகுதி நாடுகளையே அதிகம் பாதிக்கின்றன" – பிரதமர் மோடி

புதுடெல்லி: “உலகின் பெரும்பாலன சவால்களை தெற்கு பிராந்திய நாடுகள் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்பை அதிகமாக அந்நாடுகளே சந்திக்கின்றன” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா நடத்துகின்ற “வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டின்” தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” நாம் அனைவரும் மீண்டும் போர், சவால்கள், தீவிரவாதம் மற்றும் புவியியல் பதற்றம், உணவு, உரம், எரிபொருள் விலை உயர்வு போன்ற பெரும் … Read more

வெளியானது போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட்! டவுன்லோடு செய்வது எப்படி?

AP Police Constable Admit Card 2023: ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) ஆனது ஜனவரி 12ம் தேதியான இன்று 2023ம் ஆண்டுக்கான ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது.  போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை எழுத விண்ணப்பித்து இருப்பவர்கள் slprb.ap.gov.in என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சரிபார்த்து ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.  2023ம் ஆண்டில் நடைபெறும் … Read more

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர்

புதுடெல்லி: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். குடியரசு தலைவரை சந்தித்த தமிழ்நாடு பிரதிநிதிகள் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ம் தேதி உரையாற்றும்போது, தமிழ்நாடு என்று சொல்லாமல், தமிழகம் என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ்நாட்டுக்காகவும், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரையும் சொல்லாமல், தன்னிச்சையாக சில பகுதிகளை … Read more