தேசிய இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஏதுவாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கும் … Read more

தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது மாருதி சுசுகி நிறுவனம்..!

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ  கண்காட்சியில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது. 3 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இன்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சி வருகின்ற 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் கார்களை காட்சிபடுத்தியுள்ளன. மாருதி சுசுகி அறிமுகப்படுத்திய இந்த SUV கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கி.மீ தூரம் வரை செல்லும் எனவும், … Read more

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்.   

கொரோனா 4வது அலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்; சுகாதாரத்துறை அமைச்சர்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், … Read more

எருமேலியில் இன்று பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக சபரிமலையில் தினமும் சராசரியாக 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு!

ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more

பிரதமரானது முதல் தனது மருத்துவ செலவுக்காக அரசின் நிதியை மோடி பயன்படுத்தவில்லை: தகவல் ஆர்வலருக்கு பிரதமர் அலுவலகம் பதில்

புதுடெல்லி: பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை மோடி தனது மருத்துவ செலவுக்காக அரசின் நிதியை பயன்படுத்தவில்லை என்று தகவல் ஆர்வலருக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் பிரஃபுல் சர்தா என்பவர், பிரதமர் மோடி தொடர்பான சில தகவல்களை கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார். அதற்கு பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலில், ‘பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றது முதல் … Read more

இஸ்ரோவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

புதுடெல்லி: இங்கிலாந்து முதன்முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயரலாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்பின் போயிங் விமானத் தில் 9 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட் வைக்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அயர்லாந்தின் … Read more

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழா: 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற … Read more

ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி 7 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கணக்கு வாத்தியார் போக்சோவில் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில், ஸ்ெபஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி 7 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷபீர் கான், 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகள் 7 பேர் தங்களது பெற்றோருடன் சென்று சிபாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் ஒரு மாணவி, ‘கடந்த டிசம்பர் … Read more