பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு

Union Budget 2023: வரவிருக்கும் பட்ஜெட்டில் (Budget 2023) நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களுக்கு சுங்க வரி (Custom Duty)  உயர்த்தப்படலாம் எனத் தகவல். மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேக் இன் இந்தியா (Make In India) பிரச்சாரத்திற்கும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர் பார்க்கபடுகிறது. இந்தியாவில் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் 35 பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதுக்குறித்து பார்ப்போம். … Read more

இலவச வீட்டுமனை கோரி மனு.. ஒருநாள் ‘அட்ஜெஸ்ட்’ செய்ய சொல்லி மெசேஜ் அனுப்பிய கிராம நிர்வாக அலுவலர்.. புரட்டி எடுத்த பெண்….

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் ஜெகன் அண்ணா இலவச வீட்டு மனை கோரி விண்ணப்பித்த பெண்ணிடம், ஒரு நாள் ‘அட்ஜஸ்ட்’ செய்ய சொல்லி வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பிய கிராம வருவாய் அதிகாரியை, கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அலுவலகத்திற்கே வந்து பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. பைக்காராவ்பேட்டை அருகேயுள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு, இலவச வீட்டுமனை வேண்டும் என்றால், தன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என, … Read more

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 116 திட்டங்களுக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பருவநிலை மாற்ற சவால்களை மீறி 2021-22ல் நாட்டில் 315.17டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.73,731.4 கோடியில் 116 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அதானி குழுமத்துடன் இணைந்த சீன நாட்டவர் யார்? அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹிண்டன்பர்க்

அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படும் சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் லிங் குறித்து ஹிண்டன்பர்க் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால், இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான அதானி குழுமம், அடுத்தடுத்து தள்ளாட்டங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது, தாம் எழுப்பியிருந்த 88 கேள்விகளில், பல கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருந்தது. அதிலும், சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் – லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் … Read more

முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு – காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டெல்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின்(ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஜனவரி 14 -ம் தேதி இக்கூட்டம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநரான நஜீப்ஜங் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் அனுமதியின் பேரில் அதன் முக்கிய நிர்வாகிகளான இந்திரேஷ்குமார், ராம் லால் மற்றும் கிருஷ்ண கோபால் தாஸ் ஆகியோர் கூட்டத்தில் … Read more

Budget 2023: பருப்பு – சோப்பு விலையெல்லாம் குறையுமா? எதிர்பார்ப்பில் சாமானியர்கள்

budget 2023 expectations: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் எதிர்பார்க்களை பட்டியலிட்டுள்ளனர். அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு – சோப்பு முதல் எண்ணெய் உள்ளிட்ட காய்கறி சாமான்கள் வரை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விலைகளை குறைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது … Read more

மத்திய பட்ஜெட்டை உலகமே உற்று நோக்குவதாக பிரதமர் பேச்சு

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்குவதாகவும், சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர், குடியரசுத்தலைவராக பழங்குடியின பெண் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது, அரசியலமைப்புக்கே பெருமை என்றார். மேலும், நாட்டிற்கும், மக்களுக்கும் முன்னுரிமை என்ற நோக்கத்துடன் கூட்டத்தொடர் முன்னெடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது ஆக்கப்பூர்வ கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என … Read more

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த புகாரில், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, ஜனவரி 7ம் தேதி அன்று பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

`டெல்லி முதல்வரை சுட்டுக்கொல்லப்போகிறேன்’- கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பரபரப்பு ஃபோன்கால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த நபரை நள்ளிரவு வரை தேடி போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று மாலை டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கொலைமிரட்டல் விடுத்த நபர் யார் என்று டெல்லி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். தொடர்ந்து நள்ளிரவில் அவரை கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, ஓடிசா மாநில சுகாதாரத்துறை … Read more

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசையின் உரை – நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு பதில்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை 2023-24 வருவாய் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திடாததால் மாநில அரசு, உயர்நீதி மன்றத்தில் நேற்று அவசர மனுவை தாக்கல் செய்தது. ஆனால், மனுவை ஏற்பதற்கு முன், இருதரப்பு வழக்கறிஞர்களும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதனைத் தொடர்ந்து … Read more