ஜனவரி 26 குடியரசு நாளாக தேர்வானது எப்படி தெரியுமா ?

இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வித்திட இயலும் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் … Read more

இனி மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிய வேண்டும்..!!

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துறைத் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரியமான கதராடைகளை அணிந்து, கைத்தறி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் அரசுத்துறைகளுக்கு அனுப்பிய மற்றொரு உத்தரவில், “மாதம் தோறும் 15-ந் தேதி மக்கள் குறைகளைத் தீர்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் மனுக்களைப் பெற … Read more

ஆணையத்துடன் இணைந்து தேர்தல் சீர்திருத்தங்கள் – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 13-வது வாக்காளர் தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ரிஜிஜு பேசியதாவது: மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக உள்ளது. தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் … Read more

உலகில் முதன்முறையாக நாசி வழி கொரோனா மருந்து இந்தியாவில் இன்று அறிமுகம்

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இதற்கு கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா … Read more

கர்நாடகாவில் பதான் படத்துக்கு எதிர்ப்பு – போராட்டம் நடத்திய 35 பேர் கைது

பெங்களூரு: பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து நடனம் ஆடியதால் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் மங்களூரு, பெலகாவி, கல்புர்கி ஆகிய இடங்களில் பதான் படத்தை திரையிட்ட திரையரங்குகளை இந்துத்துவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மங்களூருவில் பஜ்ரங்தள அமைப்பினர் பாரத் திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், பேனர் ஆகியவற்றை … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்த, இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை ஊக்குவிக்கவும், பொது சந்தையில் விலைவாசி உயரும் போது அதனைக் கட்டுப்படுத்தவும் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை மொத்த சில்லரை விற்பனையாளர்கள் அல்லது தனியார் வர்த்தகர்களுக்கு விற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தையில் கோதுமை மாவு … Read more

ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக … Read more

1000 நினைவுச் சின்னங்களை விரைவில் சீரமைக்கும் திட்டம்: ஒன்றிய கலாசார துறை தகவல்

புதுடெல்லி: மித்ரா நினைவுச்சின்ன திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 1,000 நினைவுச்சின்னங்களை புதுப்பிக்க ஒன்றிய கலாசார துறை திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுலா தறையின் கீழ் மித்ரா நினைவுச்சின்ன திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது சுற்றுலா துறையிடம் இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலாசாரா துறைக்கு மாற்றப்பட்டது. தற்போது திருத்தி அமைக்கப்பட்ட மித்ரா நினைவுச்சின்ன திட்டம் அதன் புதிய இணையதள முகவரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று … Read more

ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: ஜனாதிபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜனாதிபதி முர்மு தெரிவித்து உள்ளார். 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நேற்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்.  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள  தொலைநோக்குப் பார்வை, நமது நாட்டை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அந்த காலகட்டத்தில்  இந்தியா … Read more

தலைமை நீதிபதி பரிந்துரையின்படி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: இன்று வெளியாகிறது

புதுடெல்லி: குடியரசுத் தினமான இன்று  தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிடுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதனை வரவேற்றிருந்தனர். தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் ஆறு … Read more