ஷவர்மாவிற்கு அடுத்து பிரியாணி..? கேரளாவிற்கு வந்த சோதனை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

உத்தராகண்ட் | ஜோஷிமத் நகர விரிசல் பாதிப்புக்கு 'வளர்ச்சி' திட்டங்களே காரணம்: ஜோதிர் பீட சங்கராச்சாரியார்

ஜோஷிமத்: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்று ஜோதிர்மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வரதி குற்றம்சாட்டியுள்ளார். ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட மடங்களில் ஒன்று ஜோதிர்மடம். நாட்டின் வடக்கு திசையில் கேதார்நாத் அருகே அமைந்துள்ள இந்த மடம் ஜோஷிமத் என்று அழைக்கப்படுகிறது. இந்த மடத்தின் பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில்தான் தற்போது கட்டிடங்களிலும், நிலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்குள்ள மக்கள் … Read more

மேலும் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு தடை; மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி.!

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஜெய்ஷ்-இ-முகமது குழுவானது ஒரு `பயங்கரவாத` அமைப்பு என இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளன. உரி தாக்குதலோடு சேர்த்து 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில் விளக்கம்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த போலியானது என நிதி ஆயோக் கூறியுள்ளது. இதுதொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் தகவல் வெளியிட்டிருப்பதாக ஒரு போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த ஒரு … Read more

’படித்ததும் கிழித்துவிடவும்’… எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் 47 வயதான ஹரி ஓம்சிங். இவர், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ’நான், உன்னை அதிகம் நேசிக்கிறேன். பள்ளி விடுமுறை நாட்களில் உன்னைக் காணாதது அதிக வருத்தத்தைத் தருகிறது. ஆகையால், உனக்கு … Read more

பெண் மீது சிறுநீர் கழித்த நபர் அதிரடி கைது!!

விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. குற்றம்சாட்டப்பட்ட அந்நபர், தன் மனைவி, குழந்தைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அசிங்கம், … Read more

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாக முன்னிறுத்துவது இந்திய ஒற்றுமை யாத்திரையின் நோக்கம் அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

கர்னல்(ஹரியானா): வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ளவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஹரியாணாவில் நடைபெற்று வரும் நிலையில், கர்னல் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ”ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரை, அரசியல் யாத்திரை அல்ல. … Read more

டெல்லி கார் விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்; குடும்பத்திற்கு உதவிய ஷாருக்கான்.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங், 20, என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர். இதில் இருசக்கர வாகனம் … Read more

ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஏழுமலையான் தரிசன டிக்கெட் 9ம் தேதி வெளியீடு

திருமலை: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருப்பதியில் தரிசனம் செய்ய ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், பிப்ரவரி மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் 9ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் ‘https://tirupatibalaji.ap.gov.in/#/login’ என்ற அதிகாரப்பூர்வமான … Read more

பொம்மையை தொலைத்த குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரயில்வே.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி!

ரயிலில் பயணித்த போது ஒன்றரை வயது குழந்தை தொலைத்த பொம்மையை இந்தியன் ரயில்வே நிர்வாகத்தினர் தேடிச் சென்று கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று (ஜன.,04) செகந்திராபாத்தில் இருந்து அகர்தாலவுக்கு சென்ற சிறப்பு ரயிலின் B-2 பெட்டியில் பயணித்த பூஷின் பட்நாயக் என்பவர்தான் ரயில்வேயின் 139 என்ற ஹெல்ப்லைனை அழைத்து அதே பெட்டியில் பயணித்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தவறவிட்ட பொம்மை குறித்து தெரிவித்திருக்கிறார். அதன்படி, அந்த பயணித்தின் போது அதே பெட்டியில் … Read more