6 மாதம் திருப்பதி கோயில் மூடல்?; தேவஸ்தானம் பரபரப்பு விளக்கம்!

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11.59 மணி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசி நாளில், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஏழுமலையானின் புகழ் பாடி அதிகாலையில், சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்தால் … Read more

ஜன. 2 முதல் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்

ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது என்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையடுத்து தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும். Source link

பெங்களூரு விமான நிலையத்தில் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனையை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை இணை அமைச்சர்

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆபத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனை வசதிகளை சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆய்வு செய்தார். தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் சோதனை நடைமுறையின் நேரடி விளக்கமும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக MoS தெரிவித்தார்.

"உங்கள் அப்பாவிடமும் எனக்கு பயம் கிடையாது…" – ஆதித்ய தாக்கரேவிற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் பதிலடி

நாக்பூர்: “ஆதித்ய தாக்ரே மீது மட்டும் இல்லை, முன்னாள் முதல்வரான அவரது அப்பா உத்தவ் தாக்ரே மீது கூட பயம் கிடையாது” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 32 வயது இளைஞனுக்கு மகாராஷ்டிரா அரசு பயப்படுவதாக ஆதித்ய தாக்கரே கூறியதற்கு பதிலடியாக அம்மாநில துணை முதல்வர் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,” எங்களுக்கு அவருடைய … Read more

போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல – ஆந்திர முதல்வர் அனல் பேச்சு

ஆந்திர மாநிலம் ஜோகினத்துணிபாலம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றியது பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது அனல் பறக்க குற்றசாட்டுகளை அவர் வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் விளம்பர வெறிக்கு மனித உயிர்களை அவர் பலி கொடுத்து விட்டதாக ஜெகன் மோகன் கூறினார். தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியது; ஒரு நல்ல அரசியல் என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே … Read more

பீகாரில் சமீபத்தில் விஷ சாராய பலிக்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது

டெல்லி: பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை … Read more

காஷ்மீர் 2022 | 93 என்கவுன்டர்களில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2022ல் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நிகழும் பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2022 இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வெறுமனே பாஜகவை எதிர்காமல் நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி – காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓத தமிழக பாஜக கடிதம்

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓதக் கோரிகோயில் நிர்வாக அறங்காவலருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் இக்கோயிலில் தேவாரமும் திருவாசகமும் பாடப்படுவதில்லை. மாறாக, அக்கோயிலின் அன்றாட பூஜைகளில் சுக்லயஜுர் வேதம் பாடப்படுகிறது. மாலை ஏழு மணிக்கு நடைபெறும் சப்தரிஷி … Read more

பொங்கலுக்குப்பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

பிரதமர் மோடி தமது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக, டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என, பாஜகவினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களவைத்தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கட்சியையும் அமைச்சரவையையும் பலப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்களின் செயல்திறனுக்கு ஏற்ப, இலாக்காக்களைப் பிரித்தளிக்கவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைக்கும் எம்பிக்களுக்கு அமைச்சர் பொறுப்புகளை வழங்கவும் பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் … Read more