"உங்கள் அப்பாவிடமும் எனக்கு பயம் கிடையாது…" – ஆதித்ய தாக்கரேவிற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் பதிலடி

நாக்பூர்: “ஆதித்ய தாக்ரே மீது மட்டும் இல்லை, முன்னாள் முதல்வரான அவரது அப்பா உத்தவ் தாக்ரே மீது கூட பயம் கிடையாது” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 32 வயது இளைஞனுக்கு மகாராஷ்டிரா அரசு பயப்படுவதாக ஆதித்ய தாக்கரே கூறியதற்கு பதிலடியாக அம்மாநில துணை முதல்வர் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,” எங்களுக்கு அவருடைய … Read more

போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல – ஆந்திர முதல்வர் அனல் பேச்சு

ஆந்திர மாநிலம் ஜோகினத்துணிபாலம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றியது பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது அனல் பறக்க குற்றசாட்டுகளை அவர் வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் விளம்பர வெறிக்கு மனித உயிர்களை அவர் பலி கொடுத்து விட்டதாக ஜெகன் மோகன் கூறினார். தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியது; ஒரு நல்ல அரசியல் என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே … Read more

பீகாரில் சமீபத்தில் விஷ சாராய பலிக்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது

டெல்லி: பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை … Read more

காஷ்மீர் 2022 | 93 என்கவுன்டர்களில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2022ல் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நிகழும் பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2022 இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வெறுமனே பாஜகவை எதிர்காமல் நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி – காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓத தமிழக பாஜக கடிதம்

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓதக் கோரிகோயில் நிர்வாக அறங்காவலருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் இக்கோயிலில் தேவாரமும் திருவாசகமும் பாடப்படுவதில்லை. மாறாக, அக்கோயிலின் அன்றாட பூஜைகளில் சுக்லயஜுர் வேதம் பாடப்படுகிறது. மாலை ஏழு மணிக்கு நடைபெறும் சப்தரிஷி … Read more

பொங்கலுக்குப்பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

பிரதமர் மோடி தமது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக, டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என, பாஜகவினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களவைத்தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கட்சியையும் அமைச்சரவையையும் பலப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்களின் செயல்திறனுக்கு ஏற்ப, இலாக்காக்களைப் பிரித்தளிக்கவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைக்கும் எம்பிக்களுக்கு அமைச்சர் பொறுப்புகளை வழங்கவும் பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் … Read more

அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை அமலுக்கு வருகிறது: ஒன்றிய அரசு தகவல்

டெல்ல : மூத்த குடிமக்களுக்கான  சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை அமலுக்கு வருகிறது. ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதை தொடந்து அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு … Read more

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்: மாநில அரசு அறிவுறுத்தல்..!

கேரளாவில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டதுடன், கூட்ட நெரிசலான பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் … Read more

2024 தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் முகமாக இருப்பார்: கமல்நாத்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்யின் பிரதமர் முகமாக ராகுல் காந்தி இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், “2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ராகுல் காந்தி எதிர்க்கட்சியின் முகமாக மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருமே இத்தகைய நீண்ட பாத யாத்திரையை மேற்கொண்டதில்லை. காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்த ஒரு குடும்பமும் இத்தனை பெரிய தியாகங்களை நாட்டுக்காக … Read more