‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி – காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓத தமிழக பாஜக கடிதம்
புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓதக் கோரிகோயில் நிர்வாக அறங்காவலருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் இக்கோயிலில் தேவாரமும் திருவாசகமும் பாடப்படுவதில்லை. மாறாக, அக்கோயிலின் அன்றாட பூஜைகளில் சுக்லயஜுர் வேதம் பாடப்படுகிறது. மாலை ஏழு மணிக்கு நடைபெறும் சப்தரிஷி … Read more