Rewind 2022 | அரசியல் முகம்: ராகுல் காந்தி – யாத்திரை வியூகம்!

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குறித்த விரைவுப் பார்வை இது. இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் போட்டியிடவில்லை. அது காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது … Read more

உடைத்து வீசப்பட்ட இயேசு சிலை; பிறந்த 3வது நாளிலேயே கொடூரம்!

இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதி, ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகையாக உலகம் முழுவதும் அமைந்துள்ள தேவாலயங்களில் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. முன்னதாக 24ம் தேதி இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்டோர் கூடி இருந்த நிலையில் குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போது, சிறப்பு பாடல்கள் பாடி, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். … Read more

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மியான்மரில் இருந்து டெல்லி வந்த 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுபோல கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று … Read more

கொல்கத்தாவில் நாளை மறுநாள் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம்: 5 மாநில முதல்வர்களை சந்திக்கும் மோடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நாளை மறுநாள் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் நடைபெறுவதால், பிரதமர் மோடியை 5 மாநில முதல்வர்கள் சந்திக்கின்றனர். தேசிய கங்கா கவுன்சிலின் தலைவர் பிரதமர், அதன் பிரதிநிதிகள் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் ஆவர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கான்பூரில் தேசிய கங்கா கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இரண்டாவது முறையாக வரும் 30ம் தேதி (நாளை மறுநாள்) கொல்கத்தாவில் தேசிய கங்கா … Read more

Rewind 2022 | அரசியல் முகம்: ஏக்நாத் ஷிண்டே – சவால் விட்டு ‘வென்றவர்’!

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் மகாராஷ்டிரா முதல்வரும் பால் தாக்கரேவின் விசுவாசியுமாக அறியப்படும் ஏக்நாத் ஷிண்டேவைப் பற்றிய விரைவுப் பார்வை இது. மகாராஷ்டிரா என்றால் முதலில் நினைவுக்கு வரும் அரசியல் கட்சி சிவசேனா தான். பால் தாக்கரேவால் வளர்த்தெடுக்கப்பட்டு உத்தவ் தாக்கராவால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கட்சி அண்மையில் ஆட்டம் கண்டது. காரணம் உட்கட்சிப் பூசல். வெளிப்படையாக போர்க்கொடிய உயர்த்தியவர் ஏக்நாத் ஷிண்டே. இன்றும் தன்னை பால் தாக்கரேவின் விசுவாசி என்று … Read more

விமானக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் எண்ணம் இல்லை; அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.!

விமானக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். “சந்தை தன்னைத்தானே விளையாட வேண்டும்” என்று அவர் கூறினார். இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டி என்பது, இந்தியாவின் நிதி அழுத்தத்தில் உள்ள விமான நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து பாதிக்கப்படும் அதே வேளையில், எவ்வாறாயினும், இந்தியாவில் விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவதாக அவர் தெரிவித்தார். “20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடையை மூடும் … Read more

நேபாளம், உத்தரகாண்ட், அந்தமானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளம், உத்தரகாண்ட், அந்தமானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பாக்லுங்கில் நேற்றிரவு இரண்டு வெவ்வேறு இடங்களில் 4.7 ரிக்டர், 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்தியாவின் உத்தரகண்டிலும் நில அதிர்வு உணரப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் இன்று அதிகாலை 2.19 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், … Read more

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேஷ்முக்கின் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த 12-ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியே செல்லக் … Read more

மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும்… ஸ்டாலின், ராகுல் விருப்பம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன்” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்பு எல்லையற்றது: ராகுல் காந்தி வெளியிட்டுள்ள விருப்ப செய்தியில், ” தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு எல்லையற்றது மற்றும் விலைமதிப்பற்றது. மோடி அவர்களே, இந்த கடினமான நேரத்தில் எனது அன்பும் ஆதரவும் உங்களுடனே இருக்கிறது. … Read more

4வது தடுப்பூசியாக போட்டால் வம்பு; ‘பூஸ்டர்’ போட்டவர்களுக்கு‘நாசி’ டோஸ் வேண்டாம்: தடுப்பூசி பணிக்குழு தலைவர் பேட்டி

புதுடெல்லி: பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் நாசி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று ஒன்றிய அரசின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு தடுப்பூசிகளுடன் மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் மக்கள் போட்டுள்ளனர். இவற்றில் பூஸ்டர் தடுப்பூசியை 70 சதவீதம் பேர் இன்னும் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி போடுதல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பாரத் … Read more