இந்தியாவில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்

உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 … Read more

கர்நாடகாவில் மராத்தி பேசும் கிராமங்களை சட்டப்பூர்வமாக இணைக்க நடவடிக்கை – மகாராஷ்டிர பேரவையில் தீர்மானம்

நாக்பூர்: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேஎல்லைப் பிரச்சினை கடந்த 1957-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி, முன்பு பாம்பேவின் ஒரு பகுதியாக இருந்தது. மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் மராத்தி பேசுகின்றனர். அதனால் இந்தப் பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கூறுகிறது. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழி அடிப்படையில் செய்த வரையறை தொடர்பாக மகாஜன் ஆணையம் கடந்த 1967-ம் ஆண்டு தாக்கல்செய்த … Read more

பெங்களூருவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டிசம்பர் 24,25,26 தேதிகளில் இந்தியா வந்த 39 பேருக்கு தொற்று

கர்நாடகா: வெளிநாடுகளில் இருந்து கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் இந்தியா வந்த பயணிகளில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் ஓமிக்ரான் பி.எப்.5 வைரஸ், பி.எப்.7 வைரசாக உருமாற்றமடைந்து சீனா மட்டுமில்லாது பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் … Read more

மூணாறில் அதிர்ச்சி – வனப்பகுதியில் அடுத்தடுத்து பலியான மூன்று குட்டி யானைகள்

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து முன்று குட்டி யானைகள் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் சுற்றுலா தலமான மூணாறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக யானைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் குட்டிகளுடன் வரும் யானைக் குட்டிகளை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் மூணாறு அருகே தேவிக்குளம் வனசரகத்திற்க்கு உட்பட்ட புதுக்கடி வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குட்டியானையும் தொடர்ந்து குண்டலா வனப்பகுதியில் … Read more

நடிகையை தொடர்ந்து இன்ஸ்டா பிரபலம் தற்கொலை!!

இன்ஸ்டா பிரபலமான சத்தீஸ்கரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராய்கரில் கெலோ விஹார் காலனியில் வசித்து வந்த லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து … Read more

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல -மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு … Read more

சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 12 பேருக்கு கரோனா

பெங்களூரு: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த 37 வயதான பயணி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்த போது கரோனா தொற்று கண்டறியப்பட்டது. … Read more

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது..!

புதுச்சேரியில், அ.தி.மு.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அ.தி.மு.க. சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர். Source link

ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் RTI சட்டம் வலுவிழந்துவிடும்: சமூக ஆர்வலர்கள் அச்சம்

டெல்லி: ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமை சட்டம் வலுவிழந்துவிடும் என RTI ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உலகின் அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. பிற நாடுகளை போல, இணையதள பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் ஆபத்துக்கும் அளவில்லை. பொது தளத்தில் அதிகரித்திருக்கும் தரவுகளை முறையாக கையாளும் நோக்கில், டிஜிட்டல் தனி நபர் தரவு … Read more

கொரோனா பணியில் ஆசிரியர்கள்? – முக்கிய முடிவு!!

கொரோனா பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முடிவை டெல்லி அரசு திரும்பப்பெற்றது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களை டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 … Read more