ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்: 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோதனையின் போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில் 2 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் … Read more

முக்கிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் கால தாமதம்..!

டெல்லியில் அடந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரவு 11.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானமும், அதிகாலை 2.15 மணிக்கு இண்டிகோ விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. இதுபோல நடப்பு சீசனில் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது இதுவே முதல் முறை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

வங்கி மோசடி வழக்கில் கைதான விடியோகான் தலைவருக்கு சிபிஐ காவலில் சிறப்பு வசதி

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி விடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய விடியோகான் குழும நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத்தை நேற்றுமுன்தினம் போலீசார் கைது … Read more

இனி கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்… எங்கு தெரியுமா ?

 உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் BF.7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 … Read more

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை – டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சீனாவில் நாள்தோறும் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் என்றும் அடுத்த 3 … Read more

நள்ளிரவில் வாகன சோதனையில் துப்பாக்கியை காட்டி காரில் இருந்தவர்களை மிரட்டிய உதவி ஆய்வாளர்..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரில் இருந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மீர்சவுக் காவல்நிலையத்தில் காவல்துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜாபர் என்பவர் கடந்த ஞாயிறன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓப்பன் டாப் கார் ஒன்றில் 5 பேர் அந்த வழியாக வந்த போது ஜாபர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் கார் நிற்காமல் தள்ளி போய் நின்றதால் … Read more

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்: மோடி போட்ட உத்தரவு – ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் பரவும் நோய் நம்மை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி கொரோனாவுக்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கலாம். பூமிப் பந்து மிகச் சிறியது எந்த பக்கம் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் குறுகிய காலத்தில் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் உணரலாம் என்பதை கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய … Read more

 இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் யாத்திரையில் பங்கேற்க பரூக், உமர், மெகபூபா சம்மதம்: அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்: ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க  பரூக், உமர் அப்துல்லா, மெகபூபா முடிவு செய்துள்ளனர். ஆனால் அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரை காஷ்மீரை சென்றடையும்போது அதில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு … Read more