ஒடிசா ஓட்டலில் அடுத்தடுத்து மர்மம் புடினை விமர்சித்த ரஷ்ய எம்பி மரணம்: 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்

ராயகாடா: ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். பெரிய கோடீஸ்வரர். இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 4 பேருடன் ஒடிசாவுக்கு கடந்த 21ம் தேதி சுற்றுலா வந்தார். ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தார்கள். கடந்த 22ம் தேதி பாவெலுடன் வந்த விளாதிமிர் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ஓட்டல் 3வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து பாவெலும் மர்மமாக மரணம் அடைந்தார். … Read more

அசாமில் ஆலங்கட்டி மழை 4500 வீடுகள் சேதம்

தின்சுகியா: அசாம் மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. பெரிய பெரிய பனிக்கட்டியாக மழை பெய்தது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை மோரன், திங்காங், லாஹோவல், லெகாய், நகர்கடியா உள்ளிட்ட பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. … Read more

நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ்?

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில்  டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் … Read more

விமானம், ஹெலிகாப்டர் பீகார் அரசு வாங்குகிறது

பாட்னா: விஐபிக்கள், விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய விமானம், ஹெலிகாப்டரை வாங்க பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் வாங்குவதற்கான வழிமுறைகளை வகுக்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமருடன் ராகுலை ஒப்பிட்ட காங். தலைவர்: பாஜ கண்டனம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு பாஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ‘’ராமரின் பாதுகைகளை வைத்து பரதன் ஆட்சி நடத்தினார். அவர் வருவதற்கு முன்சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அதே போல் உ.பிக்கு பாதுகை வந்துவிட்டது. ராமர் … Read more

மேயர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த நடிகையை துரத்தி துரத்தி கோஷமிட்ட ரசிகர்கள்

பாட்னா: பீகாரில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 28ம் தேதியும் (நாளை), 30ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர் கரிமா தேவி சிக்கரியா என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் நேற்று பெட்டியாவுக்கு வந்தார். அவர், கரிமா தேவி சிக்கரியாவுடன் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அக்ஷரா சிங்குக்கு ஆதரவாக கூச்சலிட்டனர். வீடுகளின் மேற்கூரையில் … Read more

மைசூருக்கு சென்றுகொண்டிருந்தபோது கார் விபத்தில் பிரதமரின் சகோதரருக்கு காயம்

கர்நாடகா : மைசூருக்கு சென்றுகொண்டிருந்தபோது பிரதமர் சகோதரரின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயமடைந்தார். பிரதமர் சகோதரர் பிரகலாத் மோடி, அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உள்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கியது.

டெல்லி நடைபயணத்தில் காந்தி, நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் வரிசையில் வாஜ்பாயை ஏற்ற ராகுல் – நரசிம்ம ராவை புறக்கணித்தது ஏன்?.. காங்கிரஸ் – பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்

புதுடெல்லி: டெல்லி நடைபயணத்தில் காந்தி, நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செய்த ராகுல் காந்தி, நரசிம்ம ராவின் நினைவிடத்திற்கு செல்லாததால் தேசிய அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக இவ்விவாதம் மாறியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த 2 நாட்களுக்கு முன் ெடல்லிக்குள் நுழைந்தது. பண்டிகை காலம் என்பதால் ஒரு வார ஓய்வுக்கு பின்னர் மீண்டும் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்க உள்ளார். இந்த … Read more

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் சென்ற கார் கர்நாடகாவில் விபத்து

பிரதமர் நரந்தர மோடியின் சகோதரனான பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் இன்று மதியம் மைசூரில் பயணம் செய்த காரில் விபத்தினை சந்தித்தனர். அப்பொழுது காரில் ஐந்து பேர் இருந்தனர். மதியம் 1:30 மணிக்கு அளவில் மைசூரு – சாமராஜநகர் இடையே செல்லும்பொழுது இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.  பிரஹலாத் மோடி உட்பட காரில் ஐந்து பேர் இருந்தனர். விபத்தை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும்  முதலுதவி மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. பிரஹலாத் மோடியின் பேரனுக்குத் தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.  காரில் இருந்த 5 பேர் – பிரஹலாத் மோடி, அவரது மகன் மெகுல் மோடி, மருமகள்,பேரன் மேனத் மெகுல் மோடி மற்றும் அவர்களது ஓட்டுநர் சத்தியநாராயணன். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  சுஹைல் பாஷாSource : … Read more

கணவனை கொடுமைப்படுத்திய ‘குடிமகள்’; விரக்தி அடைந்த கணவன் விவாகரத்து கோரி மனு தாக்கல்!

சத்திஸ்கர் கோர்பா மாவட்டத்தின் பாங்கிமோங்ராவில் வசிக்கும் ஒரு இளைஞன் ஒரு விநோதமான பிரச்சனயை சந்திக்க நேரிட்டது. ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்த அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு, 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கும் அடிமையாகி … Read more