நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றத்தில் உள்ளது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

போபால்: நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் … Read more

ஏழு பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு.!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த போது, அவர்மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்தனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 18ம் தேதி, உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு … Read more

தாயுடன் தகராறு மகனை பள்ளிக்கு வெளியே நிறுத்தி தண்டனை..! தனியார் பள்ளியின் கட்டண அடாவடி

கொடைக்கானல் பள்ளி ஒன்றில் பணியாற்றிய தாயுடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையால், அங்கு 3 ஆம் வகுப்பு படித்து வரும் மகனை கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகம் வெளியில் நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது கொடைக்கானல் கீழ்பூமி அருகே உள்ள பிருந்தாவன் பப்ளிக் பள்ளி நிர்வாகம் தான், பள்ளியில் வேலை பார்த்த தாய் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று மகனை வெளியே நிற்க வைத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் … Read more

மேற்கு வங்கம் புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்

‘ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்தான் சாவர்க்கர்’ – கடிதத்தை காட்டிய ராகுல்; கருத்தை ஏற்காத உத்தவ்

அகோலா(மகாராஷ்ட்ரா): ஆங்கிலேயர்களுக்கு உதவியவர் வீர சாவர்க்கர் என்று விமர்சித்த ராகுல் காந்தி, அதற்கு ஆதாரமாக ஆங்கிலேயர்களுக்கு வீர சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.மறைந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவுநாளை முன்னிட்டு, மகாராஷ்ட்டிராவின் வாஷிம் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் … Read more

காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை.!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செயலியான பம்பில் சந்தித்த அஃப்தாப் பூனாவாலா – ஷ்ரத்தா வால்கர் ஜோடி, மும்பைக்கு அருகிலுள்ள தங்கள் சொந்த ஊரான வசாயில் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகு இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். கடந்த மே 18 அன்று, மெஹ்ராலியில் உள்ள அவர்களது வாடகை குடியிருப்பில் குடியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, அஃப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். அவர் உடலை வெட்டி, பல … Read more

6-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நபர்..!

மகாராஷ்டிர மாநில தலைமை செயலகத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நபர், பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட வலையில் விழுந்து உயிர் தப்பினார். தெற்கு மும்பையில் உள்ள அம்மாநிலத்தின் தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில், பாபு மோகாஷி என்பவர், திடீரென ஆறாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால், முன்னெச்சரிக்கையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பெரிய வலையில் அவர் விழுந்து உயிர் தப்பிய நிலையில், பாபுவை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

பெங்களூரு-அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா டிச. 2-ல் சேவையை தொடங்கும்

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து மீண்டும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையை டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவை இல்லாத நிலையில் துபாய், கத்தாறு அல்லது லண்டன், சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானங்களிலேயே பயணிகள் சென்று வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு … Read more

தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை டிராய் அமைப்பு அமல்படுத்த உள்ளதாக தகவல்..!

தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை 3 வாரங்களில் டிராய் அமைப்பு நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தொலைபேசியில் பதிவு செய்யப்படாத நபர்கள் அழைக்கும்பொழுது, ட்ரூகாலர் செயலி மூலம் அவர்களின் பெயர் கண்டறியப்படும் நிலையில், அந்த செயலிக்கு மாற்றாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர்கள் அளித்த தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அந்த புதிய நடைமுறை செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. Source link

80 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479 சரக்கு ரயில்கள் உள்ளது. இவற்றை நிர்வகிக்க ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 67 … Read more