வாரணாசியில் தமிழக அரசு சார்பில் பணிகள் மும்முரம்: பாரதியார் வாழ்ந்த அறை நினைவிடமாக மாறுகிறது
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழர்கள் வாழும் பகுதியாக அனுமன் காட் உள்ளது. கங்கைகரையில் ஹரிச்சந்திரா காட்டிற்குஅருகில் இது உள்ளது. தனது தந்தை இறந்த பின் இங்குள்ள தனது மாமா வீட்டுக்கு மகாகவி பாரதியார் அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுக்கு மேல் வாரணாசியில் வாழ்ந்த பாரதியார் இன்றும் உ.பி. மக்களால் நினைவுகூரப்படுகிறார். இதனால் தமிழ் பிராமணர்கள் வாழும் பகுதியான அனுமர் காட் முன்பாக பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள தமிழர்கள் மடமான நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் … Read more