தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக வருகின்ற 20ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், … Read more

'தலித், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை': காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மும்பை: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் யாத்திரையை தொடங்கிய ராகுல், இதுவரை 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவின், வாஷி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர், பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற … Read more

நாய் கடித்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாய் கடித்ததில் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்குமாறு குருகிராம் மாநகராட்சிக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் நகரை சேர்ந்த முன்னி என்ற பெண் அப்பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது உறவினருடன் வேலைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவரை நாய் ஒன்று ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது. இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், குருகிராமில் … Read more

பள்ளி குழந்தைகளை பூச்சி சாப்பிட வைத்த தலைமை ஆசிரியர்!!

அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பூச்சிகள் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தரமில்லாத மதிய உணவு வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் குழந்தைகளுக்கு வெறும் சாதத்துடன் உப்பு மட்டுமே கொடுக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டார். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக புகார் தெரிவித்த நபரை கைது செய்ததாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,561 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,561 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியவில் ஒருநாள் … Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்களில் இனி புதிய வகை உணவுகள்..!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக, உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் … Read more

திரைப்பட பாணியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிக்கினார் ‘ஸ்படிகம்’ விஷ்ணு..!

கேரளாவில், வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை வேட்டியால் முகத்தை மூடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த 1995-ம் ஆண்டு, மோகன்லால் நடித்த ‘ஸ்படிகம்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில், மோகன்லால் தன் எதிரிகளை பின் தொடர்ந்து சென்று, திடீரென தன் வேட்டியை அவிழ்த்து அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு அவர்களை தாக்குவார். இதனால், எதிராளிகளுக்கு தன்னை தாக்கியது யார் என்றே தெரியாது. … Read more

2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் 1,000% கூடுதலாக செலவு செய்த வேட்பாளர்கள்

அகமதாபாத்: கடந்த 2017-ல் ஆண்டு நடந்த குஜராத் பேரவைத் தேர்தல் செலவு குறித்து மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் (டிஐஎஸ்எஸ்), அமெரிக்காவைச் சேர்ந்த பிலடெல்பியா டெம்பிள் யூனிவர்சிட்டி, நாஷ்வில் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017-ம் ஆண்டில் குஜராத் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணைய விதிகளின்படி வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதிக்கு ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும். … Read more

நாட்டையே அதிர வைத்த கொலை வழக்கு: 35 துண்டுகளாக காதலியை வெட்டி பிரிட்ஜில் மறைத்த கொடூரம்.. ஆதாரங்களைத் திரட்டி வரும் போலீசார்..!

காதலியைக் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் 16 நாட்கள்  மறைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதை காட்டுக்குள் போய் புதைத்து வந்த கொடூரமான காதலன் அப்தாபிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷரத்தா என்ற 27 வயது இளம் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்த அப்தாபை சத்ரபுர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சம்பவத்தை நிகழ்த்திக் காட்டி வீடியோ படம் எடுத்தனர். அங்கு புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் எலும்புகளையும் போலீசார் தோண்டி எடுத்தனர். … Read more

தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: டெல்லி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடெல்லி: தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோயில்பட்டி எம்.எல்.ஏவான கடம்பூர் ராஜூ பேசும் போது, “தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்து, அந்த தொழிலுக்கு ஒன்றிய நிதி … Read more