8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்
திருமலை: தெலங்கானாவில் எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக 8 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் வகுப்புகளை பிரகதி பவனில் இருந்தபடி மெய்நிகர் சேவையில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தெலங்கானா வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். தெலங்கானா நாட்டிற்கு வழிகாட்டியாக மாறி வருகிறது. புதிதாக 8 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பெருமைக்குரியது. … Read more