பிரதமர் மோடியின் வழியை பின்பற்றி மக்களுக்கு உதவ வந்துள்ளார் ரிவாபா: மனைவிக்கு வாக்களிக்க ரவீந்திர ஜடேஜா பிரச்சாரம்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு தொடர்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது. இது குறித்து ரவீந்திர ஜடேஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத்தில் பேரவைத் தேர்தல் வந்துவிட்டது, இது டி20கிரிக்கெட் போட்டி போல் உள்ளது. என் மனைவி … Read more

குடியரசுத் தலைவரின் தோற்றம் குறித்து அவதூறுப் பேச்சு.. மேற்குவங்க அமைச்சரின் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் மம்தா பானர்ஜி!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் தோற்றம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்குவங்க அமைச்சர் அவதூறாக பேசியதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத்தலைவர் குறித்ததான அமைச்சர் அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். அவர் பேசியது தவறு என்றும், அத்தகைய கருத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்த மம்தா பானர்ஜி, அதற்காக மன்னிப்பு கோரினார்.  Source link

கர்நாடகாவில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூச திட்டம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் புதியதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு, ரூ.1,800 கோடி செலவில் 7,601 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் டெண்டர் எடுத்த நிறுவனங்கள் வகுப்பறை கட்டுமான பணியை தொடங்க உள்ளன. இந்நிலையில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிப்பதுடன் வகுப்பறைகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயர் சூட்ட … Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி..!!

புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நேரு நடைபெற்றது . விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- எதிர்காலத்தில் இந்தியாவை சிறந்த நாடாக்குவது மாணவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது. மத்திய அரசு இப்போது புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. சிறந்த கல்வியை பெற்று மாணவர்கள் சிறந்து விளங்குவதுதான் … Read more

மாணவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை புதிய இந்தியாவை கனவு காணுங்கள்

புதுடெல்லி: ‘புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடையே பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மூ அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி திரவுபதி கூறியதாவது: குழந்தை பருவம் என்பது மிகவும் அழகான காலகட்டம். அப்போது அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் அவர்களை உயிர்ப்புடன் உருவாக்குகின்றது. குழந்தைகள் தினத்தில் குழந்தைகளின் அப்பாவித்தனம் … Read more

என்ன தான் கோபம் வந்தாலும் காதலியை இப்படி செய்யலாமா ? மனித மிருகமாக மாறிய காதலன்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா. இவர் மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே கால் சென்டரில் பணி புரிந்து வந்த அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு இரு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லிக்கு ஓடிய அந்த காதல் ஜோடி, மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… பால் விலை உயர்வு நிறுத்திவைப்பு..!!

பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு கர்நாடக அரசுக்கும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் கோரிக்கை விடுத்தது. அத்துடன் பால் விலை உயர்வு பட்டியலையும் இணைத்து அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கன்னட தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து பதிலளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடக பால் கூட்டமைப்பு பால் … Read more

ஜனாதிபதி குறித்து அமைச்சர் சர்ச்சை மன்னிப்பு கேட்டார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஜனாதிபதியின் தோற்றம் குறித்த அமைச்சரின் கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார். மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி நந்திகிராமில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘‘சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்’’ என பேசினார்.   அமைச்சரின்  … Read more

கிராம நீதிமன்றம் அமைக்கலாமா? அனைத்து ஐகோர்ட்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க  உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இந்திய குடிமகன் யாரும் சமுதாய, பொருளாதார மற்றும் இதர காரணங்களுக்காக நீதி பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு, அதனை தீர்க்கும் காரணமாக கிராமங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி பல்வேறு மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை … Read more

திருப்பதியில் டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான மெய்நிகர் டிக்கெட்டுகள் நாளை(புதன்கிழமை) காலை வெளியிடப்படுகிறது. இதில் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் நேரடியாக பங்கேற்க முடியாது. இந்த டிக்கெட்களை வைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த டிக்கெட்கள் நாளை காலை 10 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.